பிரபல நடிகர்களுடன் கலக்கும் டிடியின் முன்னாள் கணவர்

டிடி-யின் முன்னாள் கணவரான ஸ்ரீகாந்த் நடிகர் சாந்தனு மற்றும் அவரின் நண்பர்களுடன் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.
 
பிரபல நடிகர்களுடன் கலக்கும் டிடியின் முன்னாள் கணவர்

பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் தொகுப்பாளனியாக பல வருடங்களாக இருந்து வருபவர் தான் டிடி என்கிற திவ்யதர்ஷினி.

இவர் விஜய் டிவி-யில் ஜோடி NO.1, சூப்பர் சிங்கர், அன்புடன் டிடி என பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார் என்று தான் கூறவேண்டும்.

மேலும் இவருக்கு கடந்த 2014 ஆம் ஆண்டு ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவருடன் திருமணமானது, பின் சில காரணங்களால் இவர்கள் 2017 ஆம் ஆண்டு விவாகரத்து செய்து கொண்டனர்.

இந்நிலையில் தற்போது டிடி-யின் முன்னாள் கணவரான ஸ்ரீகாந்த் நடிகர் சாந்தனு மற்றும் அவரின் நண்பர்களுடன் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. மேலும் இந்த புகைப்படத்தை பிரபல இசையமைப்பாளர் தமன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.


 

From around the web