வனிதா போல் மாறிய தர்ஷன்..!

கடந்த வாரம் விளையாட்டாக நடந்த எலிமினேஷனுக்கான நாமினேஷன் போது பலரும் மதுமிதாவை தேர்வு செய்தனர். அதிலும் ரேஷ்மா மற்றும் தர்ஷன் இருவரும் மீரா மிதூனை தேர்வு செய்தனர். இறுதியாக அது ஒரு பிராங்க் என தெரிய வந்தது. அப்போதே தர்ஷன் மீது கடுப்பானார் மீரா. அதன்பின்னர் அவரிடம் பேசவுமில்லை.வார இறுதியில் கமல்ஹாசன், வெளிப்படையாக எலிமினேஷனுக்கான நாமினேஷனை அறிவித்தார். அதில், மீண்டும் இவர் மீராவின் பெயரை குறிப்பிட்டார். தர்ஷன் மற்றும் லோஸ்லியா பற்றி மற்ற போட்டியாளர்களிடம் ஏதாவது குறை கூறிக்
 

கடந்த வாரம் விளையாட்டாக நடந்த எலிமினேஷனுக்கான நாமினேஷன் போது பலரும் மதுமிதாவை தேர்வு செய்தனர். அதிலும் ரேஷ்மா மற்றும் தர்ஷன் இருவரும் மீரா மிதூனை தேர்வு செய்தனர். இறுதியாக அது ஒரு பிராங்க் என தெரிய வந்தது. 

அப்போதே தர்ஷன் மீது கடுப்பானார் மீரா. அதன்பின்னர் அவரிடம் பேசவுமில்லை.வார இறுதியில் கமல்ஹாசன், வெளிப்படையாக எலிமினேஷனுக்கான நாமினேஷனை அறிவித்தார். அதில், மீண்டும் இவர் மீராவின் பெயரை குறிப்பிட்டார். தர்ஷன் மற்றும் லோஸ்லியா பற்றி மற்ற போட்டியாளர்களிடம் ஏதாவது குறை கூறிக் கொண்டிருந்தார் மீரா மிதுன். 

வனிதா போல் மாறிய தர்ஷன்..!


மீரா தேவைக்கு ஏற்றார் போன்று மாறுவதாகவும், ஆட்களுக்கு ஏற்றார் போல நடந்து கொள்வதாக கூறினார். 

அடுத்தநாள் காலையில் உணவுக்கூடத்தில் மீண்டும் டாஸ்க்கின் போது நடந்த தவறு குறித்த உரையாடல் ஏற்பட்டது. 

அதற்கு வழக்கம் போல எதிர்ப்பு தெரிவிப்பது போல வனிதா கோபப்பட, இதை பார்த்து பொறுத்துக் கொள்ள முடியாத இவர் வனிதாவிடம் சண்டைக்கு போனார். இதனால் கோபமடைந்த வனிதா பிக்பாஸிடம் பேச வேண்டும் என்று கூறி மைக்கை கழட்டி தூக்கி வீசிவிட்டுச் சென்றார். 

இதற்கு முன்னர் தர்ஷனுக்கும் மதுமிதாவுக்கும் அபிராமி முகைன் பிரச்சினையால் மோதல் உருவானது. அதன்பின்னர் தர்ஷனிடமிருந்து விலகி விட்டார் மதுமிதா. தர்ஷனின் கோபம் ரசிகர்கள் அனைவரையும் அதிர்ச்சியடையவே செய்கிறது.

From around the web