ரூ.100 கோடி வசூலை நெருங்கும் ‘தர்பார்’: கோலிவுட் திரையுலகம் ஆச்சரியம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘தர்பார்’ திரைப்படம் நேற்று முன்தினம் வெளியான நிலையில் முதல் நாளில் இந்த படம் 34 கோடி ரூபாய் உலகம் முழுவதும் வசூல் செய்துள்ளது தமிழகத்தில் மட்டும் இந்த படம் 18 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது என்பதும் சென்னையில் மட்டும் ரூபாய் 2 கோடி வசூல் செய்து உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் இரண்டாம் நாள் தீபிகாவின் ’சப்பக்’ மற்றும் ’தாஹான்ஜி ஆகிய திரைப்படங்கள் வெளியாகியும் தர்பார் படத்தின் வசூல்
 
ரூ.100 கோடி வசூலை நெருங்கும் ‘தர்பார்’: கோலிவுட் திரையுலகம் ஆச்சரியம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘தர்பார்’ திரைப்படம் நேற்று முன்தினம் வெளியான நிலையில் முதல் நாளில் இந்த படம் 34 கோடி ரூபாய் உலகம் முழுவதும் வசூல் செய்துள்ளது

தமிழகத்தில் மட்டும் இந்த படம் 18 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது என்பதும் சென்னையில் மட்டும் ரூபாய் 2 கோடி வசூல் செய்து உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இரண்டாம் நாள் தீபிகாவின் ’சப்பக்’ மற்றும் ’தாஹான்ஜி ஆகிய திரைப்படங்கள் வெளியாகியும் தர்பார் படத்தின் வசூல் பெரிதாகக் குறையவில்லை இரண்டாவது நாளில் தர்பார் உலகம் முழுவதும் 32 கோடி வசூல் செய்துள்ளதாகவும் தமிழகத்தில் 16 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது

எனவே இரண்டு நாட்களில் மொத்தம் இந்த படம் 68 கோடி வசூல் செய்துள்ளதாகவும் இன்று மற்றும் நாளைக்குள் இந்த படம் 100 கோடி வசூலைத் தொட்டுவிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது

From around the web