’தர்பார்’ படத்தை வெளியிடத் தடை: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவால் பரபரப்பு!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’தர்பார்’ படம் நாளை மறுநாள் 9 ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாக உள்ள நிலையில் முதல் நான்கு நாட்களுக்கான டிக்கெட்டுக்கள் முழுவதும் விற்பனையாகி விட்டது என்று செய்திகள் வெளியாகிஉள்ளது இந்த நிலையில் ’தர்பார்’ படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என மலேசிய நிறுவனம் ஒன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவின் மீதான தீர்ப்பு இன்று வெளியானது. இந்த உத்தரவில் மலேசிய நிறுவனம் குறிப்பிட்டபடி ரூபாய் 23
 
’தர்பார்’ படத்தை வெளியிடத் தடை: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவால் பரபரப்பு!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’தர்பார்’ படம் நாளை மறுநாள் 9 ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாக உள்ள நிலையில் முதல் நான்கு நாட்களுக்கான டிக்கெட்டுக்கள் முழுவதும் விற்பனையாகி விட்டது என்று செய்திகள் வெளியாகிஉள்ளது

இந்த நிலையில் ’தர்பார்’ படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என மலேசிய நிறுவனம் ஒன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவின் மீதான தீர்ப்பு இன்று வெளியானது. இந்த உத்தரவில் மலேசிய நிறுவனம் குறிப்பிட்டபடி ரூபாய் 23 கோடி கடனை திருப்பி வழங்காமல் படத்தை வெளியிடக்கூடாது என்ற வகையில் இந்த படத்தை மலேசியாவில் மட்டும் வெளியிட தடை விதிக்கப்படுகிறது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது

இதனால் லைக்கா நிறுவனம் மற்றும் மலேசியாவில் உள்ள ரஜினி ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் இருப்பினும் இன்னும் இரண்டு நாட்கள் இருப்பதால் அதற்குள் மேல் முறையீடு செய்து இந்த தடையை உடைக்க லைக்கா வழிவகை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

From around the web