அட, ஷிவானி கூட சண்டை போட்றாங்கப்பா, வெல்கம் டு பிக்பாஸ்!

 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த ஒரு மாதமாக மணிரத்னம் பட வசனம் போல் ஓரிரு வார்த்தைகள் மட்டுமே பேசிக் கொண்டிருந்த ஷிவானி திடீரென கேப்ரில்லாவுடன் சண்டை போட்டதால், போட்டியாளர்களுக்கு மட்டுமின்றி பார்வையாளர்களுக்கும் ’அட ஷிவானி கூட சண்டை போடுறாங்கப்பா’ என கமெண்ட்டுகளை பதிவு செய்வது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

பாட்டி சொல்லை தட்டாதே என்ற டாஸ்க்கில் பாட்டி அர்ச்சனா தனத் பத்திரத்தை தொலைத்துவிட, அந்த பத்திரத்தை தேடி போட்டியாளர்கள் அனைவரும் உள்ளனர். இந்த நிலையில் பாலாஜியிடம் பத்திரம் குறித்து கேப்ரில்லா கேட்கிறார். அதற்கு அவர் பதில் சொல்லிக் கொண்டிருக்கிறார் 

gabirilla

அப்போது திடீரென ஷிவானிக்கும் கேப்ரில்லாவுக்கும் சண்டை வருகிறது. ‘நாங்கள் இருவரும் பேசிக்கொண்டிருக்கும் போது நீ ஏன் குறுக்கே வருகிறாய் என கேப்ரில்லா கேட்க, அப்போது ஷிவானி நீ ஏன் சவுண்டாய் பேசுகிறாய் என்று கேட்க, அதற்கு ’ஆமா, நான் அப்படிதான் பேசுவேன் என்ன செய்வ இப்ப? என திருப்பி கேப்ரில்லா கேட்க, ஷிவானி அதிர்ச்சி அடைகிறார் 

கிட்டத்தட்ட ஒரு மாதமாக அமைதியாக இருந்த ஷிவானி, முதல் முறையாக கேப்ரில்லாவிடம் சண்டை போட்டது அதுவும் பாலாஜிக்கு ஆதரவாக சண்டை போட்டது மிகப்பெரிய அதிசயம்தான் என்று பார்வையாளர்கள் கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர்


 

From around the web