தாதா 87, விஜய்ஸ்ரீ, வித்யாபிரதீப், தடம்,

விக்னேஷ் சிவன் வெளியிட்ட ‘தாதா 87’ இயக்குனரின் அடுத்த பட டைட்டில்!
 

கமல்ஹாசனின் சகோதரர் சாருஹாசன் நடித்த ’தாதா87’ என்ற திரைப்படத்தை இயக்கியவர் இயக்குனர் விஜய்ஸ்ரீ என்பது தெரிந்ததே. இவர் மீண்டும் சாருஹாசன் நடிக்க இருக்கும் ’தாதா87 2.0’ என்ற திரைப்படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது

இந்த நிலையில் ’பொல்லாத உலகில் பயங்கர கேம்’ என்ற திரைப்படத்தை ஏற்கனவே இயக்கி முடித்துள்ள இயக்குனர் விஜய்ஸ்ரீ, தற்போது புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார். இந்த படத்தின் டைட்டில் ’பவுடர்’ என்று வைக்கப்பட்டுள்ளது இந்த படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் 

அருண்விஜய் நடித்த ’தடம்’ என்ற திரைப்படத்தில் போலீஸ் கேரக்டரில் நடித்திருந்தார் நடிகை வித்யா பிரதீப் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார், மேலும் மனோபாலா உள்ளிட்ட ஒரு சில நட்சத்திரங்களும் இந்த படத்தில் நடிக்க உள்ளனர், இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாகவும் அடுத்த ஆண்டு இந்த திரைப்படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன

From around the web