அட! இவரா இவருக்கு ஜோடி...,

அசுரனுடன் இணையும் மாஸ்டர் பட நாயகி....!
 
தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவிப்பை வெளியிட்டது சத்யஜோதி ஃபிலிம்ஸ்....!

இயக்குனர், புரொடியூசர், பாடலாசிரியர், நடிகர் எனப் பன்முகமுள்ளவர் நடிகர் தனுஷ். நடிகர் தனுஷ்," வேலையில்லா பட்டதாரி", "மாரி" போன்ற வெற்றி படங்களை கொடுத்தவர். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியாகி இருந்த "அசுரன்" என்ற திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டடித்தது. மேலும் இவர் "ஜகமே தந்திரம்", "கர்ணன்" போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். திரைப்படங்கள் வெளியீட்டிற்கு உள்ளநிலையில் இவரது ரசிகர்களுக்கு மேலும் ஒரு இன்ப அதிர்ச்சியைக் கொடுத்தது "சத்யஜோதி பிலிம்ஸ்". தனுஷின் 43வது படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகன் நடிப்பார் என  "சத்யஜோதி பிலிம்ஸ்" தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.

D43

நடிகை மாளவிகா மோகனின் நடிப்பில் வெளியாகி வேற லெவலாக ஓடிக்கொண்டு இருக்கும் திரைப்படம் "மாஸ்டர்". இத்திரைப்படத்தில் தளபதி விஜய் நடித்துள்ளார். மாஸ்டர் திரைப்படத்தினை "கைதி" திரைப்பட இயக்குனர் "லோகேஷ் கனகராஜ்" இயக்கினார். மாஸ்டர் திரைப்படத்தில் தளபதி விஜய்க்கு "மக்கள் செல்வன்" என்று அழைக்கப்படும் "விஜய் சேதுபதி" வில்லனாக நடித்திருந்தார். மாஸ்டர் திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் நடிப்பு அனைவரையும் கவர்ந்தது.

தற்போது சத்யஜோதி பிலிம்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் தனுஷ் மற்றும் நடிகை மாளவிகா மோகன் இருக்கும் புகைப்படத்தை ஷேர் செய்து தமிழ் ரசிகர்களுக்கு இன்பத்தை அளித்துள்ளது.

From around the web