சிடுமூஞ்சி அனிதா, காதலில் மூழ்கிய பாலாஜி: இந்த வார நாமினேஷன்!

ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை நாமினேஷன் படலம் நடைபெறும் என்பதும் அந்த நாமினேஷன் படலத்தில் சிக்கியவர்களில் குறைந்த வாக்குகள் பெற்றவர்களின் அடிப்படையில் ஒருவர் வெளியேற்றப்படுவார் என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் இந்த வார நாமினேஷனில் அனிதா, பாலாஜி, ஆரி மற்றும் சுசித்ரா ஆகிய நால்வரும் சிக்கியுள்ளனர். அர்ச்சனா, நிஷா, ரியோ, சம்யுக்தா ஆகியோர் அனிதாவை நாமினேட் செய்து உள்ளனர். இவர்கள் கூறும் பெரும்பாலான காரணம் அனிதா சிடுமூஞ்சியாக இருக்கிறார் என்பதே

#Day43 #Promo1 of #BiggBossTamil #பிக்பாஸ் - தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/IJWOJl9NHB
— Vijay Television (@vijaytelevision) November 16, 2020

அதேபோல் சுசித்ராவை ஜித்தன் ரமேஷ், ரம்யா, ஷிவானி ஆகியோர் நாமினேட் செய்கின்றனர். சுசித்ரா தேவையில்லாத விஷயத்தில் ஈடுபட்டு எரிச்சலை ஏற்படுத்துவதால் அவரை நாமினேட் செய்வதாக போட்டியாளர்கள் கூறியுள்ளனர்

அதேபோல் பாலாஜியை ஆரி மற்றும் சோம் நாமினேட் செய்தனர். பாலாஜி காதலில் விழுந்து தனது ஆட்டத்தை மறந்து விட்டதாக அவர்கள் காரணமாக கூறியுள்ளனர். மேலும் ஆரியை பாலாஜி மற்றும் அஜித் ஆகியோர் நாமினேட் செய்துள்ளனர்

இதனை அடுத்து பாலாஜி, அனிதா, ஆரி மற்றும் சுசித்ரா ஆகிய நால்வர் இந்த வார நாமினேஷன் பட்டியலில் உள்ளனர் என்பதும் இவர்களின் ஒருவர் இந்த வாரம் ஞாயிறு அன்று வெளியேற்றப்படுவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது

From around the web