ஊரடங்கால் வேலையில்லை: வறுமை காரணமாக ஒளிப்பதிவாளர் தற்கொலை!

கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக பல்வேறு துறைகளில் கோடிக்கணக்கானோர் வேலை இழந்துள்ளனர் என்பதும் வேலையிழந்த ஒருசிலர் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டனர் என்ற செய்திகள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றது என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் தமிழின் முன்னணி தொலைக்காட்சிகளில் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்து வந்த தாஸ் என்பவர் வேலை நீக்க நடவடிக்கையால் கடந்த சில நாட்களாக வறுமையில் வாடி உள்ளார். இதனை அடுத்து ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் வெளியாகி உள்ளது

திருமணமாகி 2 குழந்தைகள் உள்ள ஒளிப்பதிவாளர் தாஸ் சென்னை விருகம்பாக்கத்தில் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நேற்று அவர் திடீரென தூக்கு மாட்டி தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். ஒளிப்பதிவாளரின் தற்கொலை தொலைக்காட்சி உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

From around the web