CSK ஸ்டைலில் வலிமை அப்பேட்.... மாஸ் தான் போங்க!!!

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் அஜித். இவர் தற்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
போனி கபூர் தயாரிக்கும் இப்படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். வலிமை படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. மேலும் அடுத்தக்கட்டமாக வெளிநாட்டில் படத்தின் சேஸிங் காட்சியும் படமாக்கப்படவுதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் தளபதி விஜய்யின் 'மாஸ்டர்' படம் கடந்த ஜனவரி 14 அன்று ரிலீஸானது. இதனையடுத்து தல ரசிகர்களும் வலிமை படத்தின் அப்டேட்டுக்காக வாஞ்சையுடன் காத்திருந்தனர். ஆனால் அப்படி எதுவும் வெளியாகாத நிலையில், ரசிகர்கள் பலரும் படக்குழுவினரை டேக் செய்தே அப்டேட் கேட்க ஆரம்பித்து விட்டனர்.
இன்னும் சிலர் அதற்கு மேலே போய் பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர், கிரிக்கெட் வீரர்கள் என யாரைப் பார்த்தாலும் வலிமை அப்டேட் கேட்டு வந்தனர். சமூக வலைதளங்களில் இந்த வீடியோக்களும் வைரலானது.
இந்நிலையில் சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நடந்த கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து வீரர் மொயின் அலியிடம் சென்னை ரசிகர்கள் வலிமை அப்டேட் கேட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.
இந்நிலையில் தற்போது ஐபிஎல் 2021-கான ஏலம் நடைபெற்று வருகிறது. அதேபோல் சென்னை அணியில் மொயின் அலி இணைந்துள்ளார். CSK டிவிட்டர் கணக்கு வெளியிட்டுள்ள பதிவில் "மொயின் அலி இப்பொழுது நம்முடன். அதுதான் புதிய வலிமை அப்டேட். விசில் போடு" என்று கூறியுள்ளனர் இந்த பதிவு ரசிகர்களை குஷியாக்கி உள்ளது.