க/பெ ரணசிங்கம் பட இயக்குனர் மீது குற்ற நடவடிக்கை: எழுத்தாளர் புகார்

 

நடிகர் விஜய் சேதுபதி மற்றும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் விருமாண்டி இயக்கத்தில் சமீபத்தில் ஓடிடியில் வெளியான திரைப்படம் க/பெ ரணசிங்கம். இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இந்த படத்தின் கதை தன்னுடையது என்று புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த சிறுகதை எழுத்தாளர் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

பிழைப்பு தேடி வெளிநாடு செல்லும் தொழிலாளர்களின் அவல நிலை குறித்து நான் எழுதிய தவிப்பு என்ற சிறுகதையை திருடி விருமாண்டி க/பெ ரணசிங்கம் என்ற பெயரில் திரைப்படமாக எடுத்து இருப்பதாகவும் தனது புகாரில் அவர் குறிப்பிட்டுள்ளார் 

எனவே இயக்குனர் விருமாண்டி மீது குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சிறுகதை எழுத்தாளர் முருகதாஸ் அவர்கள் தனது புகாரில் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த புகாரின் அடிப்படையில் என்ன நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

From around the web