வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடிய கிரிக்கெட் வீரர்கள்!!!

வாத்தி கம்மிங் பாடலுக்கு இந்திய கிரிக்கெட் வீரர்கள், அஸ்வின், ஹார்திக் பாண்டியா மற்றும் குல்தீப் யாதவ் நடனமாடியுள்ளனர்.
 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணைந்து நடித்து வெளியான திரைப்படம் மாஸ்டர்.

இப்படம் வெளியாகி தற்போது தமிழகத்தில் 100 கோடியை கடந்து வசூல் செய்து சாதனை புரிந்துள்ளது. அதுமட்மின்றி உலகளவில் சுமார் 250 கோடி மாஸ்டர் திரைப்படம் வசூல் செய்துள்ளது என்று தெரிவிக்கின்றனர்.

மாஸ்டர் திரைப்படத்திற்கு மிகவும் பக்கபலமாக இருந்தது அனிருத்தின் இசை. அதிலும் வாத்தி கம்மிங் பாடலுக்கு நடமாடாத ஆளே இல்லையென்று தான் சொல்ல வேண்டும்.

இந்நிலையில் வாத்தி கம்மிங் பாடலுக்கு இந்திய கிரிக்கெட் வீரர்கள், அஸ்வின், ஹார்திக் பாண்டியா மற்றும் குல்தீப் யாதவ் உள்ளிட்டோர் நடமாடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

இந்த வீடியோ தற்போது டுவிட்டர், இன்ஸ்டாகிராம் என அணைத்து சமூக வலைத்தளத்திலும் வைரலாகி வருகிறது.

From around the web