ரஜினியையும் ருத்ராஜையும் ஒப்பிட்ட கிரிக்கெட் பிரபலம்!

 


நேற்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணிக்கு எதிராக விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்பதை ஏற்கனவே பார்த்தோம்

இந்த போட்டியில் பிரமாதமாக விளையாடிய ருத்ராஜ் கெய்க்வாட் தனக்கு ஸ்பார்க் உள்ளது என்பதை  நிரூபித்து காட்டினார். இந்த நிலையில் ருத்ராஜ் கெய்க்வாட்டுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் பிரபல கிரிக்கெட் வர்ணனையாளருமான ஹர்ஷா போஸ்லே தனது டுவிட்டர் பக்கத்தில், ருத்ராஜ் கெய்க்வாட் அல்லது சிவாஜி ராவ் கெய்க்வாட் இந்த பெயர் சென்னையில் மிகவும் பாப்புலர் என்று கூறியுள்ளார் 

ரஜினிகாந்தின் ஒரிஜினல் பெயர் சிவாஜி ராவ் கெய்க்வாட் என்பதை மறைமுகமாக ஹர்ஷா போக்லே இதன்மூலம் கூறுகிறார் என்றும் ருத்ராஜின் பெயரும் ரஜினியின் ஒரிஜினல் பெயரும் கெய்க்வாட்டில் முடிவதை அடுத்து இருவரையும் ஒப்பிட்டு இருவரையுமே சென்னை ரசிகர்கள் போற்றி வருகிறார்கள் என்பது என்ற அர்த்தத்தில் அவர் கூறியிருக்கிறார் 

அவருடைய இந்த டுவிட்டர் பதிவிற்கு ஏராளமான லைக்ஸ்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web