58 வயது நடிகருக்கு ஜோடியாகும் அஞ்சலி!

 
58 வயது நடிகருக்கு ஜோடியாகும் அஞ்சலி!

தமிழ் தெலுங்கு கன்னட திரையுலகில் பிஸியாக இருக்கும் நடிகைகளில் ஒருவர் அஞ்சலி என்பது தெரிந்ததே. இவர் தமிழில் நடித்த நிசப்தம் என்ற திரைப்படம்தான் சமீபத்தில் வெளியானது என்பது ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை இந்த படம் பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் பிரபல இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர் விஜய்மில்டன் இயக்கும் அடுத்த படத்தில் நடிக்க அஞ்சலி ஒப்பந்தமாகியுள்ளார். ஏற்கனவே கோலிசோடா, 10எண்றதுக்குள்ள போன்ற சூப்பர் ஹிட் படத்தை இயக்கிய விஜய் மில்டன் தற்போது முதல்முறையாக கன்னட படம் ஒன்றை இயக்கவுள்ளார் 

anjali

கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் நடிக்கும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க அஞ்சலி ஒப்பந்தமாகியுள்ளார். 58 வயதான சிவராஜ்குமார் ஜோடியக 34 வயதான அஞ்சலி ஜோடியாக நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பெங்களூரில் பூஜையுடன் தொடங்கியது. முதல் கட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் அங்கு உள்ளன. பெங்களூர் உள்பட கர்நாடகாவின் பல இடங்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு 40 நாட்கள் நடைபெற இருப்பதாக இயக்குனர் விஜய் மில்டன் தெரிவித்துள்ளார்

From around the web