விஜயகாந்த்துக்கு கொரோனா: ரஜினியின் முடிவில் திடீர் மாற்றம்?

 

கேப்டன் விஜயகாந்த் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு அவர் தற்போது சென்னையிலுள்ள மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பதும் தெரிந்தது

இந்த நிலையில் அடுத்த மாதம் ’அண்ணாத்த’ படப்பிடிப்பு செல்வதற்கு திட்டமிட்டிருந்த ரஜினிகாந்த், விஜயகாந்த் கொரோனாவால் பாதிப்பு என்ற செய்தி வெளியானவுடன் சற்று பின்வாங்கி இருப்பதாக தெரிகிறது 

அக்டோபர் 4 ஆம் தேதி முதல் ’அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் அக்டோபர் 10 முதல் ரஜினிகாந்த் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்பட்டது 

இதனை அடுத்து அக்டோபர் எட்டாம் தேதி ரஜினிகாந்த் ஹைதராபாத் செல்லவிருந்த திட்டமிடப்பட்டிருந்தது இந்த நிலையில் திடீரென தற்போது பாதுகாப்பாக இருந்த விஜயகாந்துக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் ரஜினிகாந்த் ’அண்ணாத்த’ படப்பிடிப்புக்கு போகலாமா வேண்டாமா என்பது குறித்து தயக்கம் காட்டி வருவதாக கூறப்படுகிறது

எனவே திட்டமிட்டபடி ’அண்ணாத்த’ படப்பிடிப்பு நடக்குமா? குறிப்பாக ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகள் நடக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும் என கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன

From around the web