’அண்ணாத்த’ படக்குழுவில் எத்தனை பேருக்கு கொரோனா: சன் பிக்சர்ஸ் தந்த அதிர்ச்சி தகவல்!

 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ் உள்பட பலர் நடித்து வந்த திரைப்படம் ’அண்ணாத்த’. சிறுத்தை சிவா இயக்கத்தில், டி இமான் இசையில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வந்தது என்பது தெரிந்ததே 

இந்த நிலையில் இன்று திடீரென இந்த படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதாகவும் படக் குழுவில் இருந்த சிலருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதே இதற்கு காரணம் என்றும் கூறப்பட்டது இதனால் ரஜினி ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்

annathe

இந்த நிலையில் சற்று முன்னர் இது குறித்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளது. வழக்கமாக செய்யப்பட்ட பரிசோதனையில் ’அண்ணாத்த’ படக்குழுவினர் நால்வருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனை அடுத்து தற்காலிகமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது

இருப்பினும் ரஜினிகாந்த் உள்பட மற்ற அனைவருக்கும் பாதிப்பு இல்லை என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே படக்குழுவினர்களின் பாதுகாப்பு கருதி மீண்டும் படப்பிடிப்பு தொடங்குவது எப்போது என்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரிசோதனை மூலம் ரஜினிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டாலும் அவர் தன்னைதானே தனிமைப் படுத்திக் கொண்டு உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது


 

From around the web