கொரோனா நோயை மறைத்ததாக கனிகா கபூர் மீது வழக்கு

இந்தி திரையுலகில் முன்னணி பாடகியாக விளங்குபவர் கனிகா கபூர்.இவர் சமீபத்தில் சிங்கப்பூர்,லண்டன் உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று திரும்பியுள்ளார். இவருக்கு கொரோனா அறிகுறிகள் இருந்து வந்துள்ளது. இதனுடன் சில விழாக்களிலும் கலந்து கொண்டுள்ளார். தனக்கிருக்கும் இந்த அறிகுறிகளை இவர் வெளியுலகத்துக்கு மறைத்து வந்துள்ளார். உத்தரபிரதேசத்தைச் சேர்ந்தஇவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதல் பிரபலம் இவர்தானாம். கடந்த மார்ச் 11ந்தேதி லண்டனிலிருந்து திரும்பிய கனிகா கபூர், கொரானா வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள்
 

இந்தி திரையுலகில் முன்னணி பாடகியாக விளங்குபவர் கனிகா கபூர்.இவர் சமீபத்தில் சிங்கப்பூர்,லண்டன் உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று திரும்பியுள்ளார். இவருக்கு கொரோனா அறிகுறிகள் இருந்து வந்துள்ளது. இதனுடன் சில விழாக்களிலும் கலந்து கொண்டுள்ளார். தனக்கிருக்கும் இந்த அறிகுறிகளை இவர் வெளியுலகத்துக்கு மறைத்து வந்துள்ளார்.

கொரோனா நோயை மறைத்ததாக கனிகா கபூர் மீது வழக்கு

உத்தரபிரதேசத்தைச் சேர்ந்தஇவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதல் பிரபலம் இவர்தானாம்.

கடந்த மார்ச் 11ந்தேதி லண்டனிலிருந்து திரும்பிய கனிகா கபூர், கொரானா வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டபோதும் அதனைப் பொருட்படுத்தாமல் பல்வேறு இடங்களுக்கு சென்றுள்ளார் பல விருந்துகளில் கலந்துகொண்டதாகவும் இவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நேற்றுதான் இவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த விருந்துகளில் முக்கிய அரசியல்வாதிகள் உள்ளிட்ட விஜபிக்கள் பலர் கலந்துகொண்டுள்ளனர். இதனால் அவர்கள் கலக்கமடைந்துள்ளனர்.

இதனால் கொரோனாவை மறைத்த குற்றத்துக்காக கனிகா கபூர் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

From around the web