பிரபல சீரியல் நடிகைக்கு கொரோனா பாசிட்டிவ்: ரசிகர்கள் அதிர்ச்சி

 

தமிழகம் உள்பட உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது என்பதும், அப்பாவி பொதுமக்கள் முதல் அமெரிக்க அதிபர் வரை இந்த கொரோனா வைரஸ் பாகுபாடு இன்றி பரவி வரும் நிலையில் பிரபல தொலைக்காட்சி நடிகை ஒருவருக்கும் பரவி இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

இந்தி தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து பிரபலமான நடிகைகளில் ஒருவர் ஷெரின் மிஸ்ரா. இவருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது 

இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் ’எனக்கு செப்டம்பர் 27ஆம் தேதி கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதியானது. இதனை அடுத்து நான் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறேன். என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தயவுசெய்து கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுங்கள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார் 

இந்த சமூக வலைதள பதிவு தற்போது வைரலாகி வருகிறது. பிரபலமான தொலைக்காட்சி நடிகை ஷிரின் மிர்சாவுக்கு கொரோனா உறுதியானதை அடுத்து அவரது ரசிகர்கள் பெரும் கவலை அடைந்துள்ளனர்

From around the web