நடிகை தமன்னாவுக்கு கொரோனா பாதிப்பு: ரசிகர்கள் அதிர்ச்சி

 

கோலிவுட் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான தமன்னாவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 

கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக கடந்த சில மாதங்களாக படப்பிடிப்புகள் நடக்காமல் இருந்த நிலையில் சமீபத்தில் படப்பிடிப்பு தொடங்க அனுமதி அளிக்கப்பட்டது. இதனையடுத்து நடிகை தமன்னா வெப்தொடர் ஒன்றின் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். அவர் தனிமனித் இடைவெளி மற்றும் மாஸ்க் அணிந்து பாதுகாப்பாக கலந்து கொண்ட போதிலும் திடீரென கொரோனா அறிகுறி ஏற்பட்டது.,

இதனையடுத்து அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் கொரோனா பாசிட்டிவ் உறுதியானது இதனால் அவர் ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார், மேலும் அந்த வெப்தொடர் படப்பிடிப்பில் கலந்து கொண்ட அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 

தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் மற்றும் இந்தி திரை உலகில் முன்னணி நடிகையாக இருக்கும் தமன்னாவுக்கு கொரோனா பாதிப்பு என்பது அவரது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது மேலும் அவர் விரைவில் குணமடைய வேண்டும் என திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்  

From around the web