நடிகர் சூர்யாவுக்கு கொரோனா பாதிப்பு: ரசிகர்கள் அதிர்ச்சி!

 

பிரபல நடிகர் சூர்யா தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும் சிகிச்சைக்குப் பின் தற்போது நலமுடன் இருப்பதாகவும் டுவிட் ஒன்றை பதிவு செய்திருப்பது ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக உள்ளது.

நடிகர் சூர்யா விரைவில் பாண்டிராஜ் இயக்கவுள்ள திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது என்பதும் அந்த படத்திற்கான ஆரம்பகட்ட பணிகள் தொடங்கி விட்டதாகவும் கூறப்பட்டது. விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென சூர்யா கொரோனா பாதிப்பில் இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

surya

இதுகுறித்து சூர்யா தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: ’கொரோனா’  பாதிப்பு ஏற்பட்டு, சிகிச்சை பெற்று நலமுடன் இருக்கிறேன். வாழ்க்கை இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை என்பதை அனைவரும்  உணர்வோம். அச்சத்துடன் முடங்கிவிட முடியாது. அதேநேரம் பாதுகாப்பும், கவனமும் அவசியம். அர்ப்பணிப்புடன் துணைநிற்கும் மருத்துவர்களுக்கு அன்பும், நன்றிகளும்.

சூர்யாவுக்கு கொரோனா பாதிப்பு என்பதும் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட தகவல்களும் இதுவரை வெளிவராத நிலையில் திடீரென சூர்யா தனது டுவிட்டரில் தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு, சிகிச்சை பெற்று நலமுடன் இருக்கிறேன் என்று கூறியது அவரது ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக உள்ளது. இருப்பினும் தற்போது அவர் நலமுடன் இருப்பதாக கூறி உள்ளதை அடுத்து ரசிகர்கள் நிம்மதி அடைந்துள்ளனர். சூர்யா  கொரோனாவில் இருந்து விரைவில் குணமாகி படப்பிடிப்புக்கு திரும்ப வேண்டும் என திரையுலகினர் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது


 

From around the web