சூர்யா-கார்த்தி பட நாயகிக்கு கொரோனா: தனிமைப்படுத்தி கொள்ள அறிவுரை!

 

கார்த்தி நடித்த ’தீரன் அதிகாரம் ஒன்று’, ’தேவ்’ மற்றும் சூர்யா நடித்த ’என்ஜிகே’, மகேஷ்பாபு நடித்த ’ஸ்பைடர்’ உள்ளிட்ட தமிழ் படங்களிலும், பல தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் நடித்தவர் ரகுல் பிரீத் சிங். இவர் தற்போது கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ’இந்தியன் 2’ படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

rakul

இந்த நிலையில் ரகுல் ப்ரீத்திசிங்கிற்கு கொரோனா பாசிட்டிவ் என்பது சற்றுமுன் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அவரே தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள அறிவுறுத்தியுள்ளார்.

சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ மற்றும் அஜய்தேவ்கானின் ‘மே டே’ உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் ரகுல் ப்ர்த்திசிங், கொரோனாவில் இருந்து குணமானவுடன் மீண்டும் படப்பிடிப்பை தொடர்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

From around the web