காமெடி நடிகர் செந்தில் மற்றும் குடும்பத்தினர்களுக்கு கொரோனா!

 
காமெடி நடிகர் செந்தில் மற்றும் குடும்பத்தினர்களுக்கு கொரோனா!

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவர் செந்தில் என்பதும் கவுண்டமணியுடன் இணைந்து இவர் பல திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பதும் தெரிந்ததே. கவுண்டமணி-செந்தில் காமெடி இன்று தொலைக்காட்சிகளில் பார்த்தாலும் ரசிக்கும் அளவுக்கு இருக்கும்.

இந்த நிலையில் கடந்த சில வருடங்களாக அரசியலில் தீவிரமாக இருக்கும் செந்தில் அதிமுக, அமமுக ஆகிய கட்சிகளில் இருந்து சமீபத்தில் பாஜகவில் இணைந்தார். மேலும் நடைபெற்று முடிந்த தேர்தல் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து அவர் தமிழகத்தின் பல பகுதிகளில் பிரசாரம் செய்தார்

senthil

இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி நடிகர் செந்தில் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, செந்தில், அவரது மனைவி மகன் மற்றும் மருமகள் ஆகிய நால்வருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து நால்வரும் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் நால்வரின் உடல்நிலையும் சீராக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

From around the web