ஷிவாங்கி மற்றும் அஸ்வினுக்கு ட்ரெண்டிங் Pair விருது

குக் வித் கோமாளி சீசன் 2 பிரபலங்களான ஷிவாங்கி மற்றும் அஸ்வினுக்கு ட்ரெண்டிங் Pair என்ற விருதை அளித்துள்ளனர்.

 
ஷிவாங்கி மற்றும் அஸ்வினுக்கு ட்ரெண்டிங் Pair விருது

பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மிக முக்கியமான நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி, இந்த ஒரு நிகழ்ச்சிக்கு பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

மேலும் தற்போது நடந்து குக் வித் சீசன் 2 நிகழ்ச்சி இறுதி போட்டியை எட்டியுள்ளது. இதில் அஸ்வின், பாபா பாஸ்கர், ஷகீலா, கனி, பவித்ரா உள்ளிட்டோர் இறுதி போட்டிக்கு சென்றுள்ளனர்.

இந்நிலையில் விஜய் டிவி-யின் பிரபல விருது வழங்கும் விழாவான விஜய் டெலிவிஷன் அவார்ட்ஸ் நேற்று நடந்துள்ளது, இதில் கலந்து கொண்ட பல நட்சத்திரங்கள் விருது வாங்கியுள்ளனர்.

மேலும் குக் வித் கோமாளி சீசன் 2 பிரபலங்களான ஷிவாங்கி மற்றும் அஸ்வினுக்கு ட்ரெண்டிங் Pair என்ற விருதை அளித்துள்ளனர். இதனை ஷிவாங்கி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார். மேலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி குழுவினர்கள் அனைவருக்கும் முக்கிய விருது ஒன்றை அளித்துள்ளனர் என்பது குறிப்படத்தக்கது.

From around the web