என்னது குக் வித் கோமாளி டைட்டில் வின்னர் இவரா?

குக் வித் கோமாளி சீசன் 2வின் வெற்றியாளர் பாபா பாஸ்கர் ஆக தான் இருக்கும் என பேசப்பட்டு வருகிறது
 
என்னது குக் வித் கோமாளி டைட்டில் வின்னர் இவரா?

சின்னத்திரையில் அதிகம் கொண்டாடி ரசிக்கப்பட்ட நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி.

ஆம் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சியின் மூலம் சீசன் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் சீசன் சென்ற வருடம் தீபாவளி அன்று துவங்கப்பட்டது.

இதில் ஷகீலா, பாபா பாஸ்கர், அஸ்வின், கனி, பவித்ரா உள்ளிட்ட ஒன்பது போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

ஆனால் ஒவ்வொரு போட்டியாளராக வெளியேறி தற்போது 5 போட்டியாளர்கள் பைனலுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். வரும் ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டு அன்று 2மணியின் இருந்து 7 மணி வரை தொடர்ந்து 5 மணி நேரம் ஒளிபரப்பாக இருக்கிறது குக் வித் கோமாளி பைனல்.

இந்நிலையில் இன்று குக் வித் கோமாளியின் பைனல் படப்பிடிப்பு நடந்து முடிந்து, எடிட்டிங் பணிகள் நடந்து வருகிறது.

ஆம் குக் வித் கோமாளி பைனல் நிகழ்ச்சியின் எடிட்டிங் பணிகள் செய்யும் இடத்தில் இருந்து படப்பிடிப்பு புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் கசிந்துள்ளது.

மேலும் குக் வித் கோமாளி சீசன் 2வின் வெற்றியாளர் பாபா பாஸ்கர் ஆக தான் இருக்கும் என்றும் ஏற்கனவே சமூக வலைத்தளத்தில் பேசப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.

From around the web