என்னையே அழவச்சிட்டடா... குக் வித் கோமாளி ஷிவாங்கி வெளியிட்டுள்ள ரீசன்ட் பதிவு

விஷால் என்னையே அழ வச்சிட்டியேடா'' என பதிவிட்டுள்ளார் ஷிவாங்கி.
 

குக் வித் கோமாளி ஷிவாங்கி வெளியிட்டுள்ள ரீசன்ட் பதிவு ரசிகர்களை கவர்ந்துள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நகைச்சுவை சமையல் நிகழ்ச்சி குக் வித் கோமாளி. தற்போது இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள ஷிவாங்கிக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உருவாகியுள்ளது. 

இந்நிலையில் ஷிவாங்கி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு க்யூட் வீடியோவை பகிர்ந்துள்ளது. அதில் அவருக்கு சர்ப்ரைஸாக கிட்டார் ஒன்றை பரிசாக கொடுத்துள்ளார் சூப்பர் சிங்கர் பிரபலம் சாம் விஷால். 

''இந்த பரிசுக்கு நன்றி சாம் விஷால். என்னையே அழ வச்சிட்டியேடா'' என பதிவிட்டுள்ளார் ஷிவாங்கி. இவர்கள் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் போதிருந்தே நல்ல நண்பர்களாக பழகி வருவது குறிப்பிடத்தக்கது. 

From around the web