மீண்டும் இணைந்த குக் வித் கோமாளி போட்டியாளர்கள்....

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் சேனலில் நடக்கும் நிகழ்ச்சிக்கு அஸ்வின், மணிமேகலை மற்றும் புகழ் மூவரும் பங்கேற்றுள்ளனர்.
 
மீண்டும் இணைந்த குக் வித் கோமாளி போட்டியாளர்கள்....

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிகழ்ச்சி வாராவாரம் சுவாரசியம் குறையாமல் ரசிகர்களை சிரிக்க வைக்கிறது. கோமாளிகள் மட்டுமல்லாது போட்டியாளர்களும் சேர்ந்துகொண்டு செய்யும் ரகளைகள் வயிற்றைப் பதம் பார்க்கின்றன. 

அதிலும் பலரைப் பற்றி மக்கள் வைத்திருக்கும் பிம்பமே இந்த சீசன் 2 மூலமாக மாறியுள்ளது. சீரியஸான மனிதர்களாக இருப்பார்கள் என்று நினைத்த பலரும் மிகவும் எளிமையான, சுவாரசியமான, ரசிக்கக்கூடிய மனிதர்களாக இருப்பதை பார்க்க முடிகிறது. அதேபோல் கோமாளிகள் உடனே போட்டியாளர்கள் பழகும் விதமும் ரசிக்கும்படி உள்ளது.

குக் வித் கோமாளி இரண்டாம் சீசனின் பைனல்ஸ் நடைபெற இருக்கிறது. இந்த பைனலில் யார் வெல்வார் என்ற எதிர்பார்ப்பு ஒரு பக்கம் இருந்தாலும், இந்த நிகழ்ச்சி முடிவடையப் போகிறது என்கிற ஏக்கம் தான் பலரது முகத்திலும் பார்க்கமுடிகிறது. 

இந்நிலையில் இந்த நிகழ்ச்சியின் பைனன்ஸ் நிகழ்ச்சி தற்போது நடந்து முடிந்துள்ளது. அதிலும் சர்ப்ரைஸாக நடிகர் சிம்பு இந்த பைனல்ஸ் நிகழ்ச்சிக்கு வருகை தந்துள்ளாராம். இந்நிலையில் பலரும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி வருகிற ஏப்ரல் 14ம் தேதி தமிழ்ப் புத்தாண்டு அன்று மதியம் 2 மணி முதல் தொடர் ஒளிபரப்பாக வெளியாக இருக்கிறது. 

இந்நிலையில் அடுத்ததாக ஐபிஎல் தொடர் துவங்க உள்ள நிலையில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் சேனலில் நடக்கும் நிகழ்ச்சிக்கு அஸ்வின், மணிமேகலை மற்றும் புகழ் மூவரும் பங்கேற்றுள்ளனர். அப்போது அவர்கள் மூவரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர். இந்த போட்டோக்கள் தற்போது வைரல் ஆகி வருகிறது.

From around the web