பலரும் ஷாக்கான பவித்ராவுடன் வந்த உயரமான மனிதர் யார்..

பவித்ராவுக்கும் சுதர்ஷனுக்குமான திருமணக் கோலத்திலான புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது.
 

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி அனைவரது விருப்பமான நிகழ்ச்சியாக மாறியிருக்கிறது.

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி பார்க்கும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் குடும்பத்தினர் போலவே நடந்து கொள்வது இந்த நிகழ்ச்சியின் மிக முக்கியமான ப்ளஸ் ஆக மாறி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் பவித்ராவுக்கு புகழுக்குமான அட்ராசிட்டி நிறைந்த பல சம்பவங்களை இந்த நிகழ்ச்சியில் நாம் பார்த்திருக்கிறோம்.

இந்த நிலையில் செலிப்ரேஷன் ரவுண்டு தான் இந்த வாரம் நடைபெற்றது. இதில் போட்டியாளர்கள் அனைவரும் தத்தம் குடும்பத்தினருடன் வருகை தந்திருந்தனர். இதனிடையே பவித்ரா திடீரென உயரமான ஒருவரை அழைத்து வந்திருந்தார். அவர் யாரென்று புகழ் ஒரு கணம் ஷாக் ஆகி, என்னடா இது? யார் இவர்? என்று அதிர்ச்சியாக பார்த்துக் கொண்டிருந்த அந்த காட்சிகளையும் இந்த நிகழ்ச்சியில் நாம் காண முடிந்திருந்தது. இதனை பற்றி பலரும் மீம்ஸ் போட்டு வந்தனர்.

இந்த நிலையில் அந்த நிகழ்ச்சியில் தம்முடைய நண்பர்தான் சுதர்ஷன் என்றும் தம்முடைய பெற்றோர் எல்லாம் வெளியூரில் இருப்பதால் தமக்கு நெருக்கமான நண்பரான சுதர்ஷனை, தான் அழைத்து வந்ததாகவும் அதேசமயத்தில் தன்னைவிட சமைக்கத் தெரிந்த ஒருவர் தான் சுதர்ஷன் அதனால் அவரை அந்த நிகழ்ச்சிக்கு அழைத்து வந்ததாகவும் பவித்ரா  குறிப்பிட்டிருந்தார்.

இதனிடையே பவித்ராவுக்கும் சுதர்ஷனுக்குமான திருமணக் கோலத்திலான புகைப்படங்கள் வைரலாகி வந்தன. இதனை பார்த்த புகழ் ரசிகர்கள் புகழ் எப்படி நிகழ்ச்சியில் சுதர்ஷனை பார்த்ததும் அதிர்ச்சி ஆனாரோ, அதே போல் அதிர்ச்சி ஆகியுள்ளனர். ஆனால் சின்னத்திரை நடிகையும் மாடலுமான பவித்ரா லட்சுமி தற்போது நிறைய விளம்பரங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் விளம்பரம் ஒன்றில் அவர் சுதர்ஷனுடன் சேர்ந்து நடித்துள்ளார். அந்த விளம்பரத்தில் வரும் காட்சி தான் அந்த திருமணக் கோலத்தில் இருக்கும் புகைப்படம் என்கிற உண்மை பிறகுதான் பலருக்கும் தெரியவந்தது. 

From around the web