பவித்ராவிற்கு அடித்த ஜாக்பாட்... புதிய படத்தல் சதீஷ்க்கு ஜோடியாக பவித்ரா

குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு தற்போது மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது.

 

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருக்கும் போட்டியாளர்களுக்கும் சரி, கோமாளிகளுக்கும் சரி தனியே ரசிகர் பட்டாளமே இருக்கிறது. அப்படி தனது கடின முயற்சியால் போட்டியில் இருந்து வெளியேறினாலும், வைல்டு கார்டு சுற்றில் சிறப்பாக செயலாற்றி பைனலுக்கு நுழைந்திருப்பவர் பவித்ரா. 

நடிகையான பவித்ரா ஆரம்பத்தில் சில படங்களில் நடித்துள்ளார். எனினும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பிறகு அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தற்போது மலையாளத்தில் ஒரு படத்தில் நடித்திருக்கும் அவருக்கு தமிழில் பெரிய வாய்ப்பு ஒன்று தேடி வந்திருக்கிறது. ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் கல்பாத்தி அகோரம் இந்த படத்தை தயாரிக்க உள்ளனர்.  

இதில் பவித்ராவுக்கு ஜோடியாக காமெடி நடிகர் சதீஷ் நடித்திருக்கிறார். மேலும் பல பிரபலங்கள் இந்த படத்தில் பணியாற்ற இருகின்றனர். படத்தின் ஷூட்டிங் இன்று ஆரம்பித்துள்ள நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் இந்த பூஜையில் பங்கேற்றுள்ளார். எனவே இந்த படம் தமிழில் அவருக்கு ஒரு திருப்புமுனையாக இருக்கும் என்று ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

From around the web