குக் வித் கோமாளியின் பிரமாண்ட பைனல்ஸ்... STR வருகையால் ரணகளமாகும் வீடு!!!!

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி வருகிற ஏப்ரல் 14ம் தேதி தமிழ்ப் புத்தாண்டு அன்று மதியம் 2 மணி முதல் தொடர் ஒளிபரப்பாக வெளியாக இருக்கிறது.
 

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி பற்றி தெரியாதவர்களே இருக்க முடியாது. வரவர பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு இணையான ரசிகர் பட்டாளம் இந்த நிகழ்ச்சிக்கும் உருவாகியுள்ளது. போட்டியாளர்களுக்கும் சரி, கோமாளிகளுக்கும் சரி தனித்தனியே ரசிகர் பட்டாளம் இருக்கிறது என்றே சொல்லலாம். 

அதிலும் முக்கியமாக புகழ், பாலா, ஷிவாங்கி, மணிமேகலை என கடந்த சீசனில் இருந்த கோமாளிகள் இந்த சீசனிலும் பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. போட்டியாளர்கள் கோமாளிகளை வைத்துக் கொண்டு சமைக்க படாதபாடு படும் காட்சிகள் ரசிகர்களை குலுங்கி, குலுங்கி சிரிக்க வைக்கிறது. இந்நிலையில் இந்த ஷோவிற்காக ரசிகர்கள் காத்திருந்து பார்க்கும் அளவிற்கு மிகப்பெரிய ரீச் அடைந்துள்ளது.

கடந்த வாரம் நடந்த வைல்டு கார்டு சுற்றில் மதுரை முத்து, பவித்ரா, தர்ஷா குப்தா, தீபா, ஷகிலா மற்றும் ரித்திகா பங்கு பெற்றுள்ளனர். இந்நிலையில் இந்த கடினமான போட்டியில் வென்று யார் அந்த பிரமாண்ட பைனல்ஸ் சுற்றுக்கு செல்வார்கள் என்று ரசிகர்கள் மிகவும் ஆவலாக காத்திருக்கின்றனர். 

ஏற்கனவே அஸ்வின், கனி மற்றும் பாபா பாஸ்கர் மூவரும் கடைசி சுற்றுக்கு நேரடியாக தேர்வாகியிருந்தனர். இந்நிலையில் நடிகை ஷகிலா மற்றும் பவித்ரா இருவரும் வைல்டு கார்டு போட்டியில் வென்றனர். இந்த வாரம் குக் வித் கோமாளி இரண்டாம் சீசனின் பைனல்ஸ் நடைபெற இருக்கிறது. 

இந்த பைனலில் யார் வெல்வார் என்ற எதிர்பார்ப்பு ஒரு பக்கம் இருந்தாலும், இந்த நிகழ்ச்சி முடிவடையப் போகிறது என்கிற ஏக்கம் தான் பலரது முகத்திலும் பார்க்கமுடிகிறது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சியின் பைனன்ஸ் நிகழ்ச்சி தற்போது நடந்து முடிந்துள்ளது. 

அதிலும் சர்ப்ரைஸாக நடிகர் சிம்பு இந்த பைனல்ஸ் நிகழ்ச்சிக்கு வருகை தந்துள்ளாராம். இந்நிலையில் பலரும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி வருகிற ஏப்ரல் 14ம் தேதி தமிழ்ப் புத்தாண்டு அன்று மதியம் 2 மணி முதல் தொடர் ஒளிபரப்பாக வெளியாக இருக்கிறது. இந்த மகிழ்ச்சியான புரோமோவை தற்போது விஜய் டிவி வெளியிட்டுள்ளது. இந்த எபிசோடு மிகவும் சிறப்பாக இருக்கப் போகிறது என்பதில் என்ன சந்தேகமும் இல்லை.

From around the web