இந்தியாவிற்கு எதிரான ட்வீட்.. மனிஷா கொய்ராலாவுக்கு எதிராக கிளம்பும் சர்ச்சைகள்!!

மனிஷா கொய்ராலா நேபாளத்தினை தனது சொந்தநாடாகக் கொண்டவர். இவர் நேபாள மொழியில் ஃபெரி பெட்டாலா என்ற படத்தின்மூலம் 1989 ஆம் ஆண்டு அறிமுகமானார். நேபாளத்தினை விட இவர் இந்திய மொழிகளிலேயே அதிகப் படங்கள் நடித்துள்ளார். ஹிந்தியில் பல படங்களிலும் நடித்தாலும் அவ்வப்போது தெலுங்கு, மலையாளம் தமிழ் எனத் தென்னிந்திய மொழிகளையும் இவர் விட்டுவைக்கவில்லை. இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான கமல்ஹாசன் மற்றும் ரஜினிக்கு ஜோடியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியன், முதல்வன், பம்பாய் போன்ற திரைப்படங்கள்
 
இந்தியாவிற்கு எதிரான ட்வீட்.. மனிஷா கொய்ராலாவுக்கு எதிராக கிளம்பும் சர்ச்சைகள்!!

மனிஷா கொய்ராலா  நேபாளத்தினை தனது சொந்தநாடாகக் கொண்டவர். இவர் நேபாள மொழியில் ஃபெரி பெட்டாலா என்ற படத்தின்மூலம் 1989 ஆம் ஆண்டு அறிமுகமானார். நேபாளத்தினை விட இவர் இந்திய மொழிகளிலேயே அதிகப் படங்கள் நடித்துள்ளார்.

 ஹிந்தியில் பல படங்களிலும் நடித்தாலும் அவ்வப்போது தெலுங்கு, மலையாளம் தமிழ் எனத் தென்னிந்திய மொழிகளையும் இவர் விட்டுவைக்கவில்லை. இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான கமல்ஹாசன் மற்றும் ரஜினிக்கு ஜோடியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியன், முதல்வன், பம்பாய் போன்ற திரைப்படங்கள் தமிழ் ரசிகர்கள் மத்தியில் இவருக்கு பெயர் பெற்றுக் கொடுத்த திரைப்படங்களாகும். சினிமாவில் இருந்து விலகிய அவர் பல ஆண்டுகளுக்குப் பின்னர் தமிழில் மாப்பிள்ளை என்ற திரைப்படத்தின்மூலம் ரீ எண்ட்ரி கொடுத்தார்.

இந்தியாவிற்கு எதிரான ட்வீட்.. மனிஷா கொய்ராலாவுக்கு எதிராக கிளம்பும் சர்ச்சைகள்!!

இந்தநிலையில் நடிகை மனிஷா கொய்ராலா இந்தியா- நேபாள எல்லை பிரச்சனை குறித்த சர்ச்சைக்குரிய பதிவு ஒன்றினைப் பதிவிட்டுள்ளார்.

நேபாள அரசு இந்தியாவின் உத்ராகாண்ட் மாநிலத்தின் சில பகுதிகளை இணைக்கப்பட்டது போன்ற ஒரு புதிய மேப்பினை வெளியிட, அதற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக மனிஷா கொய்ராலா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதாவது நடிகை மனிஷா கொய்ராலா ட்விட்டரில், “நேபாள அரசின் புதிய வரைபடத்துடன் நமது சிறிய நாட்டின் கவுரவத்தை காத்ததற்கு நன்றி” என்று பதிவிட ரசிகர்கள் செம கடுப்பாகியுள்ளனர்.

From around the web