தொடரும் சர்ச்சைகள்… ட்விட்டரில் இருந்து விலகுகிறாரா பிரசன்னா…

துல்கர் சல்மான் சமீபத்தில் மலையாளத்தில் வரனே அவசியமுண்ட என்ற படத்தின் ப்ரோமோஷன் வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டார். அந்த வீடியோவில் ஒரு காட்சியில் வளர்ப்பு நாய்க்கு பிரபாகரன் என பெயர் சூட்டப்பட்டு இருந்ததால் தமிழ் மக்கள் கடும் கண்டனம் தெரிவிக்க, நடிகர் துல்கர் சல்மான் ட்விட்டரில் மன்னிப்புக் கோரினார். அவர் ட்விட்டரில், “வரனே அவஸ்யமுன்ட்” படத்தில் வளர்ப்பு நாய்க்கு பிரபாகரன் என்று பெயர் சூட்டி இருப்பது பழைய மலையாளப் படமான பட்டனா பிரவேஷம் படத்தில் வரும் ஒரு
 
தொடரும் சர்ச்சைகள்… ட்விட்டரில் இருந்து விலகுகிறாரா பிரசன்னா…

துல்கர் சல்மான் சமீபத்தில் மலையாளத்தில் வரனே அவசியமுண்ட என்ற படத்தின் ப்ரோமோஷன் வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.

அந்த வீடியோவில் ஒரு காட்சியில் வளர்ப்பு நாய்க்கு பிரபாகரன் என பெயர் சூட்டப்பட்டு இருந்ததால் தமிழ் மக்கள் கடும் கண்டனம் தெரிவிக்க, நடிகர் துல்கர் சல்மான் ட்விட்டரில் மன்னிப்புக் கோரினார்.

அவர் ட்விட்டரில், “வரனே அவஸ்யமுன்ட்” படத்தில் வளர்ப்பு நாய்க்கு பிரபாகரன் என்று பெயர் சூட்டி இருப்பது பழைய மலையாளப் படமான பட்டனா பிரவேஷம் படத்தில் வரும் ஒரு காட்சியினைக் கிண்டலடிக்கும் காட்சியாகும்.

தொடரும் சர்ச்சைகள்… ட்விட்டரில் இருந்து விலகுகிறாரா பிரசன்னா…

மேலும் அந்த மலையாளப் படத்தினைப் பார்த்தால் நிச்சயம் இது அவர்களுக்குப் புரியும், என்னையும், படத்தின் இயக்குனரை வெறுப்பதை நாங்கள் தாங்கிக் கொள்கிறோம். ஆனால், எங்களுடைய குடும்பத்தினர் குறித்து திட்ட வேண்டாம். அந்தக் காட்சி என் அன்பான தமிழ் மக்களைக் காயப்படுத்தி இருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என்று பதிவிட்டு இருந்தார்.

இதனால் பிரசன்னா துல்கர் சல்மானுக்கு ஆறுதல் தெரிவிக்கும் விதமாக, மன்னிப்புக் கேட்க பிரசன்னாவை தமிழ் மக்கள் பலரும் திட்டித் தீர்த்தனர், இந்தநிலையில் பிரசன்னா ட்விட்டரில் இருந்து விலகுவதாக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகின.

இதுகுறித்து விஷயத்திற்கு பிரசன்னா கூறிய பதிலாவது, “உண்மையில் சிலர் செய்யும் விஷயத்துக்காக நான் ட்விட்டரிலிருந்து விலகமாட்டேன். அது பொய்யான தகவல்” என்று கூறியுள்ளார்.

From around the web