பிக் பாஸ் வீட்டில் விடிய விடிய தூங்காத போட்டியாளர்கள்!!

பிக் பாஸ் நிகழ்ச்சி 90 வது நாளை நெருங்கிவிட்டது. பிக் பாஸிடமிருந்து 5வது டாஸ்குக்கான அறிவிப்பு வந்தது, அதில் அனைவரும் வெறியோடு விளையாடினர். அதில் முகின் வெற்றி பெற்றார். அதன்பின்னர் 6 வது டாஸ்க்காக புதிர் தொகுதிகளை அடுக்குதல் என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டது, இரவு அனைவரும் தூங்கப் போக, அந்நேரத்தில் லைட்டை அஃப் செய்த பிக் பாஸ், மீண்டும் லைட் போட அனைவரும் என்னவென்று அறியாமல் நகைத்தனர். அதன்பின்னர் 7 வது டாஸ்க் கொடுக்கப்பட்டது, அதாவது கார்டன்
 
பிக் பாஸ் வீட்டில் விடிய விடிய தூங்காத போட்டியாளர்கள்!!

பிக் பாஸ் நிகழ்ச்சி 90 வது நாளை நெருங்கிவிட்டது. பிக் பாஸிடமிருந்து 5வது டாஸ்குக்கான அறிவிப்பு வந்தது, அதில் அனைவரும் வெறியோடு விளையாடினர். அதில் முகின் வெற்றி பெற்றார்.

அதன்பின்னர் 6 வது டாஸ்க்காக புதிர் தொகுதிகளை அடுக்குதல் என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டது,

பிக் பாஸ் வீட்டில் விடிய விடிய தூங்காத போட்டியாளர்கள்!!

இரவு அனைவரும் தூங்கப் போக, அந்நேரத்தில் லைட்டை அஃப் செய்த பிக் பாஸ், மீண்டும் லைட் போட அனைவரும் என்னவென்று அறியாமல் நகைத்தனர்.

அதன்பின்னர் 7 வது டாஸ்க் கொடுக்கப்பட்டது, அதாவது கார்டன் ஏரியாவில் ஒரு தங்க முட்டை வைக்கப்பட்டிருக்கும், அதனை யாரும் உடைக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மற்றவர்கள் முட்டைகளை அவர்களுக்கு தெரியாமல் உடைக்க வேண்டும். அப்படி தெரியும்படி உடைத்துவிட்டால், அவர்கள் அவுட் ஆகிவிடுவர்.

அதன்படி விடிய விடிய பிக் பாஸ் வீட்டில் யாரும் தூங்காமல் முட்டையினை பாதுகாத்துக் கொண்டிருந்தனர், கவின் தனக்கு பசிக்கிறது என வெகு நேரமாக கூறிக் கொண்டிருக்க, அது சிரிப்பினை வரவழைக்கும்படியாக இருந்தது.

அதில் சாண்டி ஒரு முகம் சுளிக்க வைக்கும் விஷயத்தினை செய்தார், அதாவது பாத்ரூமை மூடாமல், திறந்தநிலையில் சிறுநீர் கழிக்க சென்றது பார்ப்போரை முகம் சுளிக்க வைக்கும்படியாக இருந்தது.

சேரன் இதற்கு கண்டனம் தெரிவிக்க செய்தார். காலையில் பொழுதே விடிந்துவிட்டது, ஆனாலும் யாரும் தூங்கவில்லை.

இதற்கிடையே சாண்டி, ஷெரின் முட்டையினை உடைக்க முயற்சிக்கையில், ஷெரின் பார்த்துவிட சாண்டி அவுட் ஆகிவிட்டார். இத்துடன் நேற்றைய நிகழ்ச்சி நிறைவுற்றது.

From around the web