மாநாடு ஃபர்ஸ்ட்லுக்: சிம்பு ரசிகர்களுக்கு மீண்டும் கொண்டாட்டம்!

 

சிம்புவின் ரசிகர்களுக்கு கடந்த சில நாட்களாகவே கொண்டாட்டமாக உள்ளது என்பது தெரிந்ததே முதல் கட்டமாக சிம்பு நடித்துவரும் ஈஸ்வரன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மட்டுமின்றி அடுத்தடுத்து அந்த படத்தின் புதிய போஸ்டர்கள் வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது 

அதன்பின் தீபாவளி விருந்தாக ஈஸ்வரன் படத்தின் டீசரையும் படக்குழுவினர் வெளியிட்டதை அடுத்து மாஸ்டர் திரைப்படத்தின் டீசரையும் மீறி ஈஸ்வரன் டீஸர் வைரல் ஆனது என்பது குறிப்பிடதக்கது 

maanadu

இந்த நிலையில் தற்போது மீண்டும் சிம்பு ரசிகர்கள் கொண்டாட்டத்தை ஆரம்பிக்கும் வகையில் மாநாடு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இந்த வாரம் வரவிருப்பதாக வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது இதனை அடுத்து சிம்பு ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்

மாநாடு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் டிசைன் தயாராகி விட்டதாகவும் புதன் அல்லது வியாழக்கிழமை இந்த போஸ்டர் வெளியே வர அதிக வாய்ப்பு இருப்பதாகவும் படக்குழுவினர்களிடம் இருந்து கசிந்து வந்த தகவல்களிலிருந்து தெரியவருகின்றது

From around the web