ஒரே மாதத்தில் முடிவடைகிறது ‘மாநாடு’: ஜனவரி முதல் புதிய படம்!

 

நடிகர் சிம்பு கடந்த சில ஆண்டுகளாக எவ்வளவுக்கெவ்வளவு சோம்பேறியாக இருந்தாரோ, அதற்கு நேர் மாறாக தற்போது சுறுசுறுப்பாக உள்ளார் 

சுசீந்திரன் இயக்கும் ஈஸ்வரன் என்ற திரைப்படத்தை ஒரே மாதத்தில் நடித்து முடித்து கொடுத்த சிம்பு, அடுத்ததாக இன்று முதல் மாநாடு படத்தின் படப்பிடிப்பில் களமிறங்கியுள்ளார்

புதுச்சேரியில் இன்று முதல் நடக்கும் மாநாடு திரைப்படத்தின் படப்பிடிப்பையும் ஒரே மாதத்தில் முடிக்க அவர் திட்டமிட்டுள்ளார். தனது பகுதியின் காட்சிகளை மற்றும் முதலில் படமாக்கும்படி அவர் இயக்குனர் வெங்கட் பிரபுவுடன் கேட்டுக் கொண்டுள்ளதாகவும் இதனை அடுத்து அதிக பட்சம் டிசம்பர் 10 ஆம் தேதிக்குள் சிம்புவின் காட்சிகள் அனைத்தும் படமாக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது 

இதனை அடுத்து ஜனவரி முதல் மற்றொரு புதிய படத்தில் நடிக்க சிம்பு முடிவு செய்திருப்பதாகவும் இதுகுறித்த அறிவிப்புகள் இன்னும் ஒரு சில நாட்களில் வெளிவரும் என்றும் தெரிகிறது 

சிம்பு போகிற வேகத்தை பார்த்தால் வருடத்திற்கு ஐந்து அல்லது ஆறு படத்தில் அவர் நடிப்பார் என்று கூறப்படுவதால் அவரது ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

From around the web