கமல்-லோகேஷ் படத்தின் டைட்டில், இசையமைப்பாளர் அறிவிப்பு!

 

கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ள திரைப்படம் குறித்த செய்திகள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருந்த நிலையில் சற்றுமுன் லோகேஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் இப்படத்தின் டைட்டில், இசையமைப்பாளர் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

’எவனென்று நினைத்தாய்’ என்ற டைட்டிலில் உருவாகவிருக்கும் இந்த படம்  கமலஹாசனின் 232வது படம் என்றும், இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளதாகவும், அடுத்த ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் இந்த படம் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் இந்த வாய்ப்பை வழங்கிய ஆண்டவருக்கு நன்றி என்றும் லோகேஷ் கனகராஜ் தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார். இந்த படத்தின் நாயகி உள்ளிட்ட மற்ற அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது


 

From around the web