குறை சொல்லும் டாஸ்க்: ஆரி மீது குவியும் குறைகள்!

 

பிக்பாஸ் வீட்டில் ஃபினாலே டாஸ்க் கிட்டத்தட்ட முடிந்து விட்டதாகவே கருதப்படும் நிலையில் தற்போது போட்டியாளர்கள் ஒருவருக்கொருவர் குறை சொல்லும் டாஸ்க் நடைபெறுகிறது. எதிர்பார்த்தது போலவே ஆரி மீது தான் அனைவரும் குறை சொல்வது போல் தெரிகிறது.

சற்று முன் வெளியான வீடியோவில் ஆரி குறித்து சோம் கூறிய போது ’ஆரி முதல் நாளிலிருந்தே மற்ற போட்டியாளர்களை குறை கூறி வருகிறார். என்னிடம் பல போட்டியாளர்கள் குறித்து குறை கூறியுள்ளார். அதே போல் என்னைப் பற்றி மற்றவர்களிடம் குறை கூறி இருப்பார் என்று தான் நினைக்கிறேன் என்று கூறுகிறார் 

rio to aari

அதன் பின்னர் பேச வரும் ரியோ, ‘ஆரி சொல்ல வரும் ஒரு விஷயத்தை சுருக்கமாக கூறினார் என்றால் அவரை எதிர்க்க யாராலும் முடியாது என்றும் தன்னை மற்றவர்கள் மதிக்க வேண்டும் என்பதை கணக்கில் கொண்டு அவர் செயல்பட்டால் அவருடைய வாழ்க்கை அழகானதாக மாறும் என்றும் கூறுகிறார்

மொத்தத்தில் ஆரியை சோம், ரியோ ஆகிய இருவரும் குறை கூறிய நிலையில் மீதி உள்ள ரம்யா, பாலாஜி, கேபி மற்றும் ஷிவானி ஆகியோர் யாரை குறை கூறுகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்


 

From around the web