பாரதிராஜா, பாக்யராஜ் வாரிசுகளின் படங்களை ஒரே நேரத்தில் தயாரிக்கும் நிறுவனம்!

 

இயக்குனர் இமயம் பாரதிராஜா மற்றும் அவரிடம் உதவியாளராக இருந்து இந்தியாவின் தலைசிறந்த திரைக்கதையாசிரியராக மாறிய பாக்யராஜ் ஆகியோர்களின் வாரிசுகளின் படத்தை லிப்ரா புரொடக்ஷன் நிறுவனம் ஒரே நேரத்தில் தயாரித்து வருகிறது 

இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா இயக்கியுள்ள முதல் திரைப்படத்தை லிப்ரா நிறுவனம் தயாரிக்க உள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. இந்தப் படம் இந்நிறுவனத்தின் ஏழாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் நடிக்கும் நாயகன், நாயகி மற்றும் நடிகர் நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது

அதேபோல் பாக்யராஜின் மகன் சாந்தனு நடிக்கும் முருங்கைக்காய் சிப்ஸ்’ என்ற படத்தையும் லிப்ரா நிறுவனமே தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஷாந்தனு ஜோடியாக அதுல்யாரவி நடித்து வரும் இந்த படத்தில் பாக்யராஜ் முக்கிய கேரக்டரில் நடிக்கவுள்ளார். 

மேலும் இந்த படத்தில் யோகி பாபு, மதுமிதா, ரேஷ்மா, மனோபாலா மற்றும் யூடியூப் பிரபலம் ஸ்ரீராம் கிருஷ் ஆகியோர்களும் இந்த படத்தில் நடித்து வருகின்றனர்.
 

From around the web