கருத்துக் கூறும் "பிரபல இயக்குனர்!"

தமிழ் சினிமாவின் மிகப்பெரிய வரலாற்று திரைப்படம் "ஆயிரத்தில் ஒருவன்". ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தினை பிரபல இயக்குனர் "செல்வராகவன்" இயக்கியுள்ளார். செல்வராகவன் இயக்கத்தில் உருவாகிய இத்திரைப்படத்தில் கதாநாயகனாக நடிகர் "கார்த்தி" நடித்து இருந்தார். நடிகர் கார்த்தியுடன் இத்திரைப்படத்தில் "நடிகை ஆண்ட்ரியா"," நடிகர் பார்த்திபன்" மற்றும் பல பிரபலங்கள் நடித்து இருந்தனர். இந்த படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என்று கேட்கும் அளவிற்கு இத்திரைப்படம் நல்லதொரு வெற்றிப்படமாக அமைந்தது.

மேலும் இயக்குனர் செல்வராகவன் "புதுப்பேட்டை","7 ஜி ரெயின்போ காலனி" போன்ற பல திரைப்படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. செல்வராகவன் இயக்கத்தில் அசுரன் நாயகனாக தனுஷ் நடிப்பில் வெளியாகிய "காதல்கொண்டேன் "என்ற திரைப்படம் நடிகர் தனுஷுக்கு மிகப்பெரிய வெற்றி திரைப்படமாக அமைந்தது. மேலும் திரைப்படத்தின் மூலம் நடிகர் தனுஷ் சிறந்த கதாநாயகனாகவும் கருதப்பட்டார்.
இந்நிலையில் இயக்குனர் செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்துக்களை கூறியுள்ளார்
"உங்களின் இயற்கையான தன்மை என்னவோ அதை எதற்காகவும் யாருக்காகவும் மாற்றிக் கொள்ளாதீர்கள் ! காலம் போக போக உலகம் உங்களுக்கு ஏற்றது போல் மாறிக் கொள்ளும்" என்று கூறுகிறார் இயக்குனர் செல்வராகவன்.
உங்களின் இயற்கையான தன்மை என்னவோ அதை எதற்காகவும் யாருக்காகவும் மாற்றிக் கொள்ளாதீர்கள் ! காலம் போக போக உலகம் உங்களுக்கு ஏற்றது போல் மாறிக் கொள்ளும் 🤓🤓
— selvaraghavan (@selvaraghavan) February 23, 2021