தளபதி விஜய்யின் ’மாஸ்டர்’ சென்சார் மற்றும் ரன்னிங் டைம் குறித்த தகவல்!

 

தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ’மாஸ்டர்’ திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாக உள்ளது என்பது தெரிந்ததே. தமிழகத்தில் சுமார் 1000 திரையரங்குகளில் வெளியாக இருப்பதாகவும் தமிழ் மட்டுமின்றி மற்ற தென்னிந்திய மொழிகளிலும் இந்தியிலும் இந்த படம் ஒரே நாளில் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது

இந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் யுஏ சான்றிதழ் கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி இந்த படத்தின் ரன்னிங் டைம் சுமார் இரண்டரை மணி நேரம் அதாவது 156 நிமிடங்கள் என்றும் தகவல்கள் வந்துள்ளது. இருப்பினும் சென்சார் மற்றும் ரன்னிங் டைம் குறித்த தகவல்களை படக்குழுவினர் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது 

master

கடந்த பத்தாண்டுகளில் விஜய் நடித்த மெர்சல் சர்க்கார் மற்றும் பிகில் ஆகிய திரைப்படங்கள் யூஏ சான்றிதழ் பெற்றதை அடுத்து தற்போது ’மாஸ்டர்’ திரைப்படமும் யூஏ சான்றிதழ் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மாஸ்டர் திரைப்படம் ஜனவரி 13-ஆம் தேதி வெளியாகி கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டு விட்டதாகவும் இன்று அல்லது நாளை இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது

மேலும் படக்குழுவினர் தரப்பில் இருந்து கசிந்த தகவலின் படி ஜனவரி 1ஆம் தேதி இந்த படத்தின் டிரைலர் வெளியாக இருப்பதாகவும் அந்த டிரைலரில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்க வாய்ப்பு இருப்பதாகவும் தெரிகிறது

From around the web