எஸ்பிபி சரணை கட்டிப்பிடித்து ஆறுதல் கூறிய தளபதி விஜய்!

 

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் அவர்கள் நேற்று மதியம் 1 மணிக்கு காலமான நிலையில் அவருடைய மறைவிற்கு திரையுலகப் பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்தனர்

பல திரைநட்சத்திரங்கள் அவரது இறுதி சடங்கு நடைபெற்றுவரும் தாமரைப்பாக்கம் சென்று அஞ்சலி செலுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது 

அந்த வகையில் தளபதி விஜய் சற்றுமுன்னர் எஸ்பிபி உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்த தாமரைபாக்கம் சென்றார். அவர் எஸ்பிபி சரண் அவர்களைப் பார்த்து அவருக்கு ஆறுதல் கூறியதோடு எஸ்பிபியின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்

எஸ்பிபியின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய தளபதி விஜய் குறித்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன

விஜய்யின் தந்தை கேரக்டரில் பிரியமானவளே’ என்ற படத்தில் எஸ்பிபி நடித்திருந்தார் என்பதும், விஜய்க்காக அவர் பல பாடல்களை பாடியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

From around the web