அடுத்த மாதம் வருகிறார் "டாக்டர்!"

"நடிகர் சிவகார்த்திகேயன்" நடித்துள்ள "டாக்டர்" படத்தின் வெளியீட்டு தேதி வெளியானது!
 
"சோனி மியூசிக் சவுத்" தனது ட்விட்டர் பக்கத்தில் "டாக்டர்" வெளியீட்டு தேதி அறிவித்தது!

தனது நடிப்பாலும், தனது காமெடி திறத்தாலும் இன்று மிகப்பெரிய நட்சத்திரமாக ஜொலித்து கொண்டு இருப்பவர் "நடிகர் சிவகார்த்திகேயன்". ஆரம்ப காலங்களில் காமெடி நிகழ்ச்சிகளிலும், நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் பணியாற்றி இன்று மிகப்பெரிய நட்சத்திரமாக  ஜொலித்து கொண்டிருக்கிறார். இவர் நடிப்பில் வெளியாகிய "கேடி பில்லா கில்லாடி ரங்கா", "எதிர்நீச்சல்", "வருத்தப்படாத வாலிபர் சங்கம்" ஆகிய மூன்று திரைப்படங்களும் தொடர்ந்து வெளியாகியது. இதனால் இவர் ரசிகர்களை குறிப்பாக குழந்தை ரசிகர்களை தன் வசம் இழுத்துக் கொண்டார்.

siva karthikeyan

மேலும் இவர் நடிப்பில் வெளியாகிய "ரெமோ" திரைப்படம் நல்லதொரு வரவேற்பை பெற்றது. இன்று பிறந்தநாள் கொண்டாடிய "நடிகர் சிவகார்த்திகேயன்"க்கு பல பிரபலங்கள் வாழ்த்து கூறிய நிலையில் "சோனி மியூசிக்" தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் டாக்டர்  உருவாகியுள்ள படத்தின் வெளியீட்டு தேதி அறிவித்தது.

" டாக்டர் "திரைப்படத்தினை பிரபல இயக்குனர் "நெல்சன்" இயக்கி உள்ளார். இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளரும் தனது இசையால் தெறிக்கவிடும் இசை அமைப்பாளர் "அனிருத்" இசையமைத்துள்ளார். இந்நிலையில் இத்திரைப்படம் அடுத்த மாதம் 26ஆம் தேதியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று பிறந்த நாள் கொண்டாடும் நடிகர் சிவகார்த்திகேயன் மிகுந்த ஆனந்தத்தில் உள்ளார் .மேலும் அவரது ரசிகர்களும் உற்சாகத்தில், கொண்டாட்டத்திலும் மகிழ்ந்து கொண்டு உள்ளனர்.

From around the web