பிரபல தமிழ் காமெடி நடிகைக்கு நிச்சயதார்த்தம்: மாப்பிள்ளை யார்?

பிரபல நடிகர் மோகன் ராமன் மகளும், கௌதம் மேனன் இயக்கிய ’நீதானே என் பொன் வசந்தம்’ என்ற திரைப்படத்தில் அறிமுகமானவருமானர் காமெடி நடிகை வித்யூலேகா. இவர் ’நீதானே என் பொன் வசந்தம்’ படத்தின் வெற்றியை அடுத்து ’தீயா வேலை செய்யணும் குமாரு’ ’ஜில்லா’ ’வீரம்’ ’வேதாளம்’ ’பவர் பாண்டி’ ’பஞ்சுமிட்டாய்’ உள்பட பல திரைப்படங்களில் நடித்தார். தமிழ் படங்களில் மட்டுமின்றி தெலுங்கு படங்களிலும் அவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது மேலும் சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருக்கும் வித்யூலேகா.
 

பிரபல தமிழ் காமெடி நடிகைக்கு நிச்சயதார்த்தம்: மாப்பிள்ளை யார்?

பிரபல நடிகர் மோகன் ராமன் மகளும், கௌதம் மேனன் இயக்கிய ’நீதானே என் பொன் வசந்தம்’ என்ற திரைப்படத்தில் அறிமுகமானவருமானர் காமெடி நடிகை வித்யூலேகா. இவர் ’நீதானே என் பொன் வசந்தம்’ படத்தின் வெற்றியை அடுத்து ’தீயா வேலை செய்யணும் குமாரு’ ’ஜில்லா’ ’வீரம்’ ’வேதாளம்’ ’பவர் பாண்டி’ ’பஞ்சுமிட்டாய்’ உள்பட பல திரைப்படங்களில் நடித்தார். தமிழ் படங்களில் மட்டுமின்றி தெலுங்கு படங்களிலும் அவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருக்கும் வித்யூலேகா. அடிக்கடி தனது உடல் எடையை குறைத்த அனுபவம் குறித்தும் பகிர்ந்து வருவார். இந்த நிலையில் நடிகை வித்யூலேகாவுக்கு சமீபத்தில் திருமணம் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. சஞ்சய்என்பவர்தான் மாப்பிள்ளை

இந்த நிச்சயதார்த்தம் ஊரடங்கில் நடைபெற்றதால் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிச்சயதார்த்தம் கடந்த 26ஆம் தேதி நடைபெற்றதாகவும் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டதாகவும் அனைவரும் மாஸ்க் அணிந்து வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றியதாகவும் வித்யூலேகா தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்

வித்யூலேகாவுக்கு திருமண நிச்சயதார்த்தம் ஆனதையடுத்து திரையுலகினர் அனைவரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்

From around the web