உள்ளே வந்தா பவரடி, அண்ணன் யாரு தளபதி: விஜய்யை சந்தித்தபின் வருண் சக்கரவர்த்தி டுவீட்!

 

இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவரும், கொல்கத்தா அணியின் முன்னணி பந்துவீச்சாளர்களில் ஒருவருமான வருண் சக்கரவர்த்தி நடைபெற்று முடிந்த ஐபிஎல் போட்டியில் மிக அபாரமாக விளையாடினார் என்பது தெரிந்ததே. அவரது பந்து வீச்சில் முக்கிய விக்கெட்டுகள் விழுந்தன என்பது குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் ஆஸ்திரேலியா செல்லும் இந்திய அணிக்கு தேர்வாகி இருந்த வருண் சக்கரவர்த்தி திடீரென காயம் காரணமாக விலகினார். அவருக்கு பதிலாக தான் தமிழகத்தை சேர்ந்த நடராஜன் ஆஸ்திரேலியா சென்று உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 

vijay varun

இந்த நிலையில் சுழல்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி சமீபத்தில் தளபதி விஜய்யை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. விஜய்யின் தீவிர ரசிகரான நான் நீண்ட நாட்களாக விஜய்யை சந்திக்க வேண்டும் என்று ஆசைப்படுட்டதாகவும் அந்த ஆசை தற்போதுதான் நிறைவேறி இருப்பதாகவும் வருண் கூறியுள்ளார் 

மேலும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் விஜய் உடனான சந்திப்பு குறித்து கூறுகையில் ’உள்ளே வந்தா பவரடி, அண்ணன் யாரு தளபதி என்ற தலைப்பில் டுவிட்டரில் பதிவு செய்துள்ளார் என்பதும் இந்த டுவீட் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது


 

From around the web