பரபரப்பை உண்டாக்கிய க்ளைமாக்ஸ் பாடல்கள்

பொதுவாக இது போல பாடல்கள் பெரும்பாலும் மோகன் படங்களில்தான் அதிகம் இருந்தது. இறுதிக்கட்டத்திலோ அல்லது இறுதிக்கட்டத்தை எட்டும் சில நிமிடத்துக்கு முன்போ இதுபோல பாடல்கள் வரும். மோகன் நடித்த பயணங்கள் முடிவதில்லை படத்தில் வரும் மணியோசை கேட்டு எழுந்து என்ற பாடல் இன்றளவும் மறக்க முடியாத பாடல் உணர்வுகளை உருக்கும் அதிக சோகம் இழையோடும் க்ளைமாக்ஸ் நேரப்பாடலான இந்த பாடலுக்கு இசை வடிவம் தந்த இளையராஜாவையும் இப்பாடலையும் இன்றளவும் மறக்க முடியாது. அது போல மோகன் நடித்த
 

பொதுவாக இது போல பாடல்கள் பெரும்பாலும் மோகன் படங்களில்தான் அதிகம் இருந்தது. இறுதிக்கட்டத்திலோ அல்லது இறுதிக்கட்டத்தை எட்டும் சில நிமிடத்துக்கு முன்போ இதுபோல பாடல்கள் வரும்.

பரபரப்பை உண்டாக்கிய க்ளைமாக்ஸ் பாடல்கள்

மோகன் நடித்த பயணங்கள் முடிவதில்லை படத்தில் வரும் மணியோசை கேட்டு எழுந்து என்ற பாடல் இன்றளவும் மறக்க முடியாத பாடல் உணர்வுகளை உருக்கும் அதிக சோகம் இழையோடும் க்ளைமாக்ஸ் நேரப்பாடலான இந்த பாடலுக்கு இசை வடிவம் தந்த இளையராஜாவையும் இப்பாடலையும் இன்றளவும் மறக்க முடியாது.

அது போல மோகன் நடித்த உதயகீதம் படத்தில் தூக்கு தண்டனையை நாளை எதிர்நோக்கி உள்ள நிலையில் பாடகராக இருந்து கைதியான கதாநாயகன் மோகன் ஒரு குழந்தையின் மருத்துவ செலவுக்காக பாடிய உதயகீதம் பாடுவேன் என்ற அரிய சோக பாடலை அவ்வளவு சீக்கிரத்தில் மறந்து விட முடியுமா என்ன.

விஜய் நடித்த துள்ளாத மனமும் துள்ளும் படத்தில், கண் பார்வை இல்லாத கதாநாயகி சிம்ரன் கதாநாயகனை அதுவரை நேரில் பார்க்காமல் கண் பெற்ற பிறகு க்ளைமாக்ஸ் காட்சியில் தனக்கு உதவி செய்த கதாநாயகனை நேரில் பார்த்த பிறகு வரும் இன்னிசை பாடி வரும் பாடலின் இரண்டாம் சோக வடிவ பாடல் நம் உள்ளத்தை உருக்கி விடும் என்று சொன்னால் மிகையாகாது.

உயிருக்கு போராடும் நிலையிலும் கதாநாயகியுடன் சேர்ந்து திருவிழாவில் ராமராஜன் பாடுவதும் வில்லன் ஒருவர் அந்த இடத்தை நோக்கி காரில் வந்து கொண்டே இருக்கும் பரபரப்பையும் காண்பித்த மலேசியா வாசுதேவன், ஜானகியம்மா பாடிய யார் பாடும் பாடல் என்றாலும் பாடலை மறக்க முடியுமா.

தனக்கு வாழ்வளித்த கதாநாயகியுடன் ஏற்பட்ட சிறிய ஊடல் இந்த நேரத்தில் கதாநாயகன், கதாநாயகியுடன் யார் சிறந்தவர் என அறியும் அளவு மோகன் நடித்த பாடு நிலாவே படத்தில் வா வெளியே இளம் பூங்கொடியே போன்ற போட்டிப்பாடலை மறக்க முடியுமா.

சேது படத்தில் மனநலக்கூடத்தில் இருந்து தப்பி வரும் நாயகன் விக்ரம் கதாநாயகியை சடலமாக பார்த்த உடன் வார்த்தை தவறி விட்டாய் என ஒரு பாடல் வருமே எப்பேற்ப்பட்ட க்ளைமாக்ஸ் பாடல் பாருங்கள் நினைத்தாலே நெகிழ்கிறது.

தூள் படத்தில் பறவை முனியம்மா உடன் விக்ரம் அடித்து தூள் பறத்தும் மதுரை வீரன் தானே பாடல் சரியானதொரு மாஸ் ஆன க்ளைமாக்ஸ் பாடலாகும்

அப்போதைய கமர்ஷியல் திரைப்படங்களில் கதாநாயகன், கதாநாயகி ஸ்ட்ரெய்ட்டா வில்லன் வீட்டுக்கே சென்று ஒரே ஒரு மச்சத்தை மட்டும் வைத்துக்கொண்டு கிளைமாக்ஸ் பாடல் பாடி அவர்கள் வீட்டில் இருந்து ஏதாவது ஆவணங்களை திருடுவார்கள், அல்லது வில்லனுக்கு ஏதாவது ஆபத்தை விளைவிப்பார்கள். அத்தனையும் பாடலுக்கு நடுவிலேயே நடக்கும்

அந்தக்காலங்களில் வந்த பல படங்களில் கதைக்கேற்ப சோகப்படமோ, சஸ்பென்ஸ் படமோ அதற்கேற்ற வகையில் க்ளைமாக்ஸ் பாடல் ஒன்று வரும். பாடல் வரும்போதே படம் முடிவதற்கான சூழல் வந்துவிடும் என்பதை உணர்த்தும்.

அதிகமான படங்களில் க்ளைமாக்ஸ் நெருங்குகிறது என்பதை உணர்த்தும் வகையில் பரபரப்பான பாடல் இருக்கும். தற்போதைய காலத்தில் அது குறைவு என்று சொல்லுவதை விட கிளைமாக்ஸில் பரபரப்பை ஏற்படுத்துவது போல் பாடல் வருவதில்லை என்பதுதான் நிஜம். அப்படியே வந்தாலும் அது நீண்ட காலம் நிலைத்து நிற்கும் ரசிகர்களால் மறக்க முடியாத க்ளைமாக்ஸ் ஆக இருக்குமா என்பது சந்தேகத்துக்குரியதுதான்.

From around the web