கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றபின் சினிமா: தோனியின் பலே ஐடியா!

 

பொதுவாக கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றவர்கள் வர்ணனையாளர்களாகவோ அல்லது பயிற்சியாளர்களாக மாறிவிடுவார்கள். ஒரு சிலர் அரசியலில் குதித்து எம்பி, எம்எல்ஏக்கள் ஆகி விடுகிறார்கள் என்பதும் தெரிந்ததே 

இந்த நிலையில் தற்போது ஓய்வுக்குப் பின் தல தோனி என்ன செய்யவுள்ளார் என்று வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு முடிவை அறிவித்த தோனி, தற்போது ’தோனி என்டர்டெய்மெண்ட்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். இந்த நிறுவனத்தின் மூலமாக பல வெப்தொடர்களை தயாரிக்க முடிவு செய்துள்ளார் 
இளம் கலைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்கவும் சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற வெறியுடன் இருக்கும் இளைஞர்களுக்கு கைக்கொடுக்கும் வகையிலும் இந்த நிறுவனத்தை அவர் ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகிறது

முதல் கட்டமாக 5 வெப்த்டொஅர்கள் தயாரிக்க இருப்பதாகவும் அடுத்தடுத்து திரைப்படங்களையும் தயாரிக்க இருப்பதாகவும் தெரிகிறது. ஆனால் அதே நேரத்தில் தோனி தயாரிப்பாளராக மட்டும் இருப்பாரா சினிமா அல்லது தொடரில் நடிப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

From around the web