தினசரி பத்திரிகைகளில் சினிமா விளம்பரம்: அதிரடி முடிவெடுத்த தயாரிப்பாளர் சங்கம்!

 

தற்போது சினிமா விளம்பரங்களை வெளியிட்டு கொண்டிருக்கும் இரண்டு முன்னணி பத்திரிக்கைகள் திடீரென நான்கு மடங்கு விளம்பரக் கட்டணங்களை உயர்த்தி விட்டதால் அந்த இரண்டு பத்திரிகைகளுக்கும் விளம்பரங்களை நிறுத்தி விட்டு புதிதாக ஒரு பத்திரிகைக்கு விளம்பரம் கொடுக்க தயாரிப்பாளர் சங்கம் முடிவு எடுத்துள்ளதாக வெளி வந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

தயாரிப்பாளர்கள் தங்களது செலவை குறைக்கும் வகையில் பல முயற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் நிலையில் திடீரென தினசரி பத்திரிகைகள் சினிமா விளம்பரக் கட்டணங்களை உயர்த்தி உள்ளன 

bharathiraja

இதனை அடுத்து இன்னொரு முக்கிய பத்திரிகையிடம் தயாரிப்பாளர் சங்கம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டால் அந்த பத்திரிகைக்கு ஒட்டுமொத்த தயாரிப்பாளர்களும் விளம்பரம் கொடுக்கலாம் என்று முடிவு செய்யப்படும் என்றும் நடப்பு தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளது 

மேலும் தயாரிப்பாளர் சங்கத்துக்கு என புதிதாக ஒரு டுவிட்டர் பக்கத்தை ஏற்படுத்தி அதன் மூலம் தயாரிப்பாளர்கள் தங்களுடைய படத்தை இவ்வளவு விளம்பரம் செய்யலாம் என்றும் பத்திரிகைகளுக்கு முன்னுரிமை கொடுப்பதை விட சமூக வலைதளங்கள் மற்றும் டிஜிட்டலில் விளம்பரம் கொடுப்பதே அதிகரிக்க வேண்டும் என்றும் தயாரிப்பாளர்கள் சங்கம் தயாரிப்பாளர்களுக்கு ஆலோசனை கூறியுள்ளதாக தெரிகிறது

இது குறித்து தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

bharathiraja

From around the web