பேய்களை விட்டுவிட்டு விலங்குகளை தேடி ஓடும் இயக்குனர்கள்

கோலிவுட் திரையுலகம் கடந்த சில ஆண்டுகளாக பேய் படங்களில் சிக்கியிருந்தது. குறிப்பாக ராகவா லாரன்ஸ் இயக்கிய ‘முனி’ பட சீரியல்களில் பேய் மற்றும் காமெடி இணைந்து வந்ததால் அதே போன்று பல திரைப்படங்கள் வெளியானது. இந்த நிலையில் பேய்ப்படங்கள் சலிக்க சலிக்க வந்துவிட்ட நிலையில் தற்போது இயக்குனர்களின் பார்வை விலங்குகளை நோக்கி திரும்பியுள்ளது. ஏற்கனவே நாயை வைத்து காலா, நாய்கள் ஜாக்கிரதை போன்ற படங்களும், ஜீவா நடிக்கும் படத்தில் சிம்பன்சி குரங்கை வைத்தும், சரத்குமாரின் பாம்பன் படம்
 

கோலிவுட் திரையுலகம் கடந்த சில ஆண்டுகளாக பேய் படங்களில் சிக்கியிருந்தது. குறிப்பாக ராகவா லாரன்ஸ் இயக்கிய ‘முனி’ பட சீரியல்களில் பேய் மற்றும் காமெடி இணைந்து வந்ததால் அதே போன்று பல திரைப்படங்கள் வெளியானது. இந்த நிலையில் பேய்ப்படங்கள் சலிக்க சலிக்க வந்துவிட்ட நிலையில் தற்போது இயக்குனர்களின் பார்வை விலங்குகளை நோக்கி திரும்பியுள்ளது.

ஏற்கனவே நாயை வைத்து காலா, நாய்கள் ஜாக்கிரதை போன்ற படங்களும், ஜீவா நடிக்கும் படத்தில் சிம்பன்சி குரங்கை வைத்தும், சரத்குமாரின் பாம்பன் படம் மற்றும் ஜெய் நடிக்கும் நீயா 2 படம் பாம்புகளை வைத்தும் படங்கள் தயாரிக்கப்பட்டு வரும் நிலையில் ஒட்டகம், சிறுத்தை, குதிரை, யானை ஆகிய விலங்குகளை வைத்தும் திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன

தேவர் பிலிம்ஸ் மற்றும் ராமநாராயணன் பின்பற்றிய வெற்றிகரமான பாதையில் செல்ல முடிவெடுத்துள்ள தற்போதைய இயக்குனர்கள் விலங்குகளை அனிமேஷனில் காட்டவும் முயற்சித்து வருகின்றானர்.

From around the web