மீடு குற்றச்சாட்டு: நடிகையுடன் சமாதனம் செய்தாரா ஆக்சன் கிங்?

சின்மயியை அடுத்து திரையுலகில் உள்ள பலர் பிரபலங்கள் மீது மீடூ குற்றச்சாட்டை சுமத்தி வந்த நிலையில் ஆக்சன் கிங் அர்ஜுன் மீது அவருடன் ‘நிபுணன்’ படத்தில் நடித்த நடிகை ஸ்ருதி ஹரிஹரன் கூறிய குற்றச்சாட்டால் திரையுலகம் அதிர்ந்தது. மிஸ்டர் க்ளின் என்று சொல்லப்படும் அர்ஜூன் மீதே குற்றச்சாட்டா? என்று அனைவரும் எண்ணிய நிலையில் ஸ்ருதி மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அர்ஜூன் அறிவித்தார். இந்த நிலையில் கர்நாடாக பிலிம் சேம்பர் நிர்வாகிகள் அர்ஜூன் மற்றும் ஸ்ருதி ஆகிய
 
arjun sruthi

சின்மயியை அடுத்து திரையுலகில் உள்ள பலர் பிரபலங்கள் மீது மீடூ குற்றச்சாட்டை சுமத்தி வந்த நிலையில் ஆக்சன் கிங் அர்ஜுன் மீது அவருடன் ‘நிபுணன்’ படத்தில் நடித்த நடிகை ஸ்ருதி ஹரிஹரன் கூறிய குற்றச்சாட்டால் திரையுலகம் அதிர்ந்தது. மிஸ்டர் க்ளின் என்று சொல்லப்படும் அர்ஜூன் மீதே குற்றச்சாட்டா? என்று அனைவரும் எண்ணிய நிலையில் ஸ்ருதி மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அர்ஜூன் அறிவித்தார்.

இந்த நிலையில் கர்நாடாக பிலிம் சேம்பர் நிர்வாகிகள் அர்ஜூன் மற்றும் ஸ்ருதி ஆகிய இருவரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், இந்த விஷயத்தில் சமாதானம் செய்ய அர்ஜூன் சம்மதம் தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

ஏற்கனவே இந்த விஷயத்தில் அர்ஜூன் மன்னிப்பு கேட்பதே சரியானதாக இருக்கும் என நடிகர் பிரகாஷ்ராஜ் தெரிவித்திருந்த நிலையில் ஸ்ருதியிடம் அர்ஜூன் மன்னிப்பு கேட்டிருக்கலாம் என கூறப்படுஇறது. இருப்பினும் இதுகுறித்து கர்நாடாக பிலிம் சேம்பர் விரைவில் அறிவிப்பு வெளியிடும் என தெரிகிறது.

From around the web