ரஜினியின் ‘காலா’ பாடல் வெளியீடு: ரசிகர்கள் உற்சாகம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கிய ‘காலா’ படத்தின் ‘செம வெயிட்டு’ என்ற பாடல் நேற்று வெளியாகி இணையதளத்தை பெரும் பரபரப்புக்கு உள்ளாக்கியுள்ளது. இந்த பாடலுக்கு ரஜினி ரசிகர்கள் அமோக வரவேற்பை அளித்துள்ளனர். இந்த பாடல் வெளியான சில மணி நேரம் டுவிட்டரில் டிரெண்டாக இருந்தது ஜூன் 7ஆம் தேதி வெளியாகும் ‘காலா’ படத்தின் மற்ற பாடல்கள் வரும் 9ஆம் தேதி சென்னையில் நடைபெறும் விழாவில் வெளியாகவுள்ளது. ரஜினிகாந்த், ஈஸ்வரிராவ், ஹூமாகுரேஷி, நானா படேகர், சமுத்திரக்கனி,
 
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கிய ‘காலா’ படத்தின் ‘செம வெயிட்டு’ என்ற பாடல் நேற்று வெளியாகி இணையதளத்தை பெரும் பரபரப்புக்கு உள்ளாக்கியுள்ளது.
இந்த பாடலுக்கு ரஜினி ரசிகர்கள் அமோக வரவேற்பை அளித்துள்ளனர். இந்த பாடல் வெளியான சில மணி நேரம் டுவிட்டரில் டிரெண்டாக இருந்தது
ஜூன் 7ஆம் தேதி வெளியாகும் ‘காலா’ படத்தின் மற்ற பாடல்கள் வரும் 9ஆம் தேதி சென்னையில் நடைபெறும் விழாவில் வெளியாகவுள்ளது.
ரஜினிகாந்த், ஈஸ்வரிராவ், ஹூமாகுரேஷி, நானா படேகர், சமுத்திரக்கனி, அஞ்சலி பட்டேல், சுகன்யா, உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை தனுஷின் வொண்டர்பார் நிறுவனம் தயாரித்துள்ளது. முரளி ஒளிப்பதிவில் ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web