தூத்துகுடி விவகாரம்: சிம்புவின் ஆவேச பேச்சு

தூத்துகுடி துப்பாக்கி சூடு விவகாரம் குறித்து கமல், ரஜினி, விஷால் உள்பட பல கோலிவுட் பிரபலங்கள் கண்டனங்களை தெரிவித்துள்ள நிலையில் நடிகர் சிம்பு ஆங்கிலத்தில் தனது கருத்தை ஆவேசமாக வீடியோ ஒன்றின் மூலம் கூறியுள்ளார். அவர் கூறியதாவது: ‘தூத்துக்குடியில் போராட்டத்தில் ஈடுபட்ட அப்பாவியான பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியிருக்கிறார்கள். என்ன நடக்கிறது இந்த மாநிலத்தில். தலைவர்களும், பிரபங்களும் இரங்கல் மட்டும் தெரிவித்து வருகிறார்கள். அதனால், ஒரு புரோஜனமும் இல்லை. இதனால், இறந்தவர்கள் திரும்பி வரவா போகிறார்கள்.
 

தூத்துகுடி துப்பாக்கி சூடு விவகாரம் குறித்து கமல், ரஜினி, விஷால் உள்பட பல கோலிவுட் பிரபலங்கள் கண்டனங்களை தெரிவித்துள்ள நிலையில் நடிகர் சிம்பு ஆங்கிலத்தில் தனது கருத்தை ஆவேசமாக வீடியோ ஒன்றின் மூலம் கூறியுள்ளார். அவர் கூறியதாவது:

‘தூத்துக்குடியில் போராட்டத்தில் ஈடுபட்ட அப்பாவியான பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியிருக்கிறார்கள். என்ன நடக்கிறது இந்த மாநிலத்தில். தலைவர்களும், பிரபங்களும் இரங்கல் மட்டும் தெரிவித்து வருகிறார்கள். அதனால், ஒரு புரோஜனமும் இல்லை. இதனால், இறந்தவர்கள் திரும்பி வரவா போகிறார்கள். இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. மனசு வலிக்கிறது. மொழி தான் பிரச்சனையா.. நான் ஆங்கிலத்தில் பேசுகிறேன். பிரச்சனைக்கு தீர்வு என்னிடம் உள்ளது. என் கிட்ட.. தமிழர்கள் கிட்ட மோதாதே’ என அவேசமாக பேசியுள்ளார்.

சிம்புவின் இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் மிக வேகமாக பரவி வருகிறது. மேலும் அவரது துணிச்சலான கருத்துக்கு நெட்டிசன்கள் மத்தியில் பாராட்டுக்களும் குவிகிறது.

சிம்பு, தூத்துகுடி, வீடியோ, துப்பாக்கி சூடு

Simbu said about Tuticorin issue

From around the web